எள்ளோட சேர்ந்து எலிப்புழுக்கையும் காய்ஞ்ச கணக்கா, ஒராளின்ர சொந்த லாபத்துக்காக மூண்டு வருத்தக்காரர் ஆஸ்பத்திரிலை அரைநாளுக்கும் மேல ஆத்துலைஞ்ச கதை கேள்விப்பட்டிருக்கிறியளோ? கேள்விப்படாட்டி ஒருக்கா மந்திகை ஆஸ்பத்திரிப்பக்கம் எட்டிப்பாத்தியள் எண்டா வடிவா அறிஞ்சு கொள்ளலாம்.
போன வெள்ளிக்கிழமை அந்த ஆஸ்பத்திரியில் டரீட்மெண்ட் எடுத்துக்கொண்டிருந்த நாலு வருத்தக் காரரை உடனடியா பெரியாஸ்பத்திரிக்கு மாத்தச் சொல்லி டொக்டர்மார் சொல்லியிருக்கினம். மந்தி கையில இருந்து பெரியாஸ்பத்திரிக்கு வருத்தக்காரரை அங்க உள்ள அம்புலன்ஸிலதான் கொண்டு போகோணும். அதுக்காக நாலு வருத்தக்காரரையும். அவையவை இருந்த வார்ட்டில இருந்து'வீல் செயாரில் (சக்கரநாற்காலியில) சிற்றூழியர்மார் தள்ளிக்கொண்டு அம்புலன்ஸ் ரிக்கிற இடத்துக்கு கொண்டந்திருக்கிணம். அந்த நாலு வருத்தக்காரரில் ஒருத்தருக்கு இதயப் பாதிப்பு, அதால அவரை முதல்ல ஏத்திப்போட்டு, மற்றவையும் ஏறி இருந்திருக்கினம். ஆனால் கொஞ்ச நேரத்தில இதய வருத்தக்காரரை தவிர மிச்ச மூண்டு பேரையும் அம்புலன்ஸுல இருந்து இறங்கச் சொல்லி இருக்கினம். ஒரு இளம் பிள்ளை மருந்து குடிச்சு சீரியஸா இருக்கு, அவாவை இப்பவே பெரியாஸ் பத்திரியில சேர்க்கோணும், அதால நீங்கள் இறங்குங்கோ. மருந்து குடிச்ச பிள்ளையையும், ஹார்ட் வருத்தக்காரரையும் இந்த அம்புலன்ஸில கொண்டு போறம். இன்னொரு அம்புலன்ஸ் இப்பவரும். அதில நீங்கள் ஏறிவரலாம் 'எண்டிட்டு அந்த அம்புலன்ஸ் றைவர் வெளிக்கிட்டிட்டார். அந்த அம்புலன்ஸ் போன கொஞ்சநேரத்திலையே மற்ற அம்புலன்ஸும் வந்திட்டு ஆனால் மிச்சமா நிண்ட மூண்டு வருத்தக்காரரையும் அதில ஏத்துறமாநிரி தெரியேலை.
கடைசியில, 4 மணிபோலதான் அம்புலன்ஸ் வெளிக்கிடும் எண்டு அதுக்குப் பொறுப்பா நிண்ட ஓராள் சொன்னதால எந்த 'வீல் செயாரில' வருத்தக்காரரை கொண்டந்தினமோ அதிலையே கொண்டுபோய் பத்திரமா பழையபடி வார்ட்டிலையே சிற்றூழியர்மார் விட்டிருக்கினம். மத்தியானத்தில் இருந்து அதுவரைக்கும் சிற்றூழியர்மார்தான் கால்கடுக்க 'வீல்செயாரோட நிண்டவை. இப்ப அம்புலன்ஸ் நாலுமணிக்குத்தான் எண்டுசொல்ல, அவைக்கு கோபம் வந்தாலும் வெளியில காட்டாமல் வாய்க்குள்ள மட்டும் புறுபுறுத்துக் கொண்டு போட்டினம். பிறகு திரும்ப அந்த வருத்தக்காரரை அம்புலன்ஸ் நிக்கிற இடத்துக்கு கூட்டியாங்கோ எண்டு ஓர்டர் வர, அப்பதான் போய் கொஞ்சம் ஆறுதலா இருப்பம் எண்டு நினைச்ச சிற்றூழியர்மார் அவசர அவசரமா முண்டு வருத்தக்காரரையும் திரும்ப வில் செயாரில்' கூட்டிக்கொண்டு வந்திச்சினம், பின்னேரம் 3.30 மணிக்கே அவையை அம்புலன்ஸுல ஏத்தின பிறகும் அது வெளிக்கிடாமல் அப்பிடியே அசையாமல் நிண்டிருக்கு. எப்ப அம்புலன்ஸ் வெளிக்கிடும் எண்டது தெரியாமல் அரைமணித்தியாலத்துக்கு மேல வெயிட் பண்ணிக்களைச்சுப்போய் 'எப்ப வெளிக்கிடுவியன்? எண்டு றைவரைக் கேட்டிருக்கிாம். அதுக்கு றைவர் 'அங்க வாறவாவை கேளுங்கோ' எண்டு சிராளைக் கட்டியிருக்கிறார். அவாதான் அம்புலன்ஸ் போய் வாறதுக்குப் பொறுப்பா இருக்கிற சிற்றூழியம். மந்திகையில இருந்து பெரியாஸ்பத்திரிக்கு போற வழியில் நான் அவான்ர வீடு இருக்கு. அதால, வேலை முடிஞ்சு அம்புலன்ஸில போய் நான் இறங்கிறதுக்கு வசமியாந்தான் இப்பிடி நாலுமணி மட்டும் அம்புலன்ஸில வருக்குக்காரரை ஏத்தி அனுப்பாமல் இழுத்தடிச்சவயாம். இப்ப என்ளு ஆர், எலிப்புழுக்கை ஆர் எண்டு விளங்கி யிருக்கும். இப்பிடி ஒவ்வொருத்தரும் தங்கட வசதிக்காக வருத்தக்காரரைப் போட்டு வாட்டுறது நியாயமோ?
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.