அஞ்சாறுநாளா உந்த ஆஸ்பத்திரி விசயங்களை பட்சி எட்டிப்பாக்கேலை. ஆனாலும் அப்பிடிப் பாக்காமலும் விடேலாது தானே. ஏனெண்டால் ஊரிப்பட்ட விசயங்கள் சொல்லவேண்டிக் கிடக்கே. அண்டைக்கு பிரைவேட் ஆஸ்பத்திரியில் அட்மிசன் போட்டிட்டு, பெரியாஸ்பத்திரியில் ஒப்பிரேஷன் செய்யிற விசயத்தை பட்சி சொல்லியிருந்தது. அதேமாதிரி இன்னொரு விசயமும் நடக்கு. அண்டைக்கு சொன்னது. முதலே பிளான் போட்டு பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பி. காசு உழைக்கிறது. இன்னொண்டு, தங்களில் பழி வரக்கூடாது எண்டதுக்காகச் செய்யிறது.
பிரைவேட் ஆஸ்பத்திரியளில் இசகுபிசகா ஏதும் ட்ரீட்மெண்ட் செய்து, வருத்தக்காரரை காப்பாத்த முடியாத நிலைமையோ இல்லாட்டி அங்க வைச்சு மருத்துவம் செய்யமுடியாத நிலைமையோ வந்தாலும், உடனேயே அவையை பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பிப் போடுவினம். கேட்டால், "நாங்கள் எல்லாம் வடிவாத்தான் செய்தனாங்கள். பெரியாஸ் பத்திரிக்காரர்தான் ஏதோ பிழையா மருந்தைக் குடுத்துப் போட்டினம்" எண்டு கதையை மாத்திப்போடுவினமாம். அதால இப்பபிரை வேட் ஆஸ்பத்திரியளில இருந்து வாறவையை பெரியாஸ்பத்திரிக்குள்ள ட்ரீட் மெண்டுக்கு எடுக்கவேண்டாம் எண்டு வாய்மொழியாச் சொல்லப்பட்டிருக்காம். பணம் ஓரிடம். பாவம் ஓரிடம் எண்டு இல்லாமல், இனிமேல் பிரைவேற் ஆஸ்பத்திரிக்காரரே பணத்தோட சேர்த்து பழியையும், பாவத்தையும் சம்பாதிக்க வேண்டிய நிலை வந்திட்டு,
யாழ்ப்பாணத்தில பெரும் பிரச்சினையளைக் கிளப்பின ஆஸ்பத்திரி விசயங்கள் சிலது. இப்பிடி பிரைவேட் ஆஸ்பத்திரியன் செய்த பிழைக்கு பெரியாஸ்பத்திரி பலியாடானதால வந்ததுதானாம். ஆனால் தாங்கள் ஏதோ உத்தமர் மாதிரி இந்த விசயங்களில பிரைவேட் ஆஸ்பத்திரியள் 'கப்சிப்' எண்டு இருந்ததால, உயிரைக் காப்பாத்தவெண்டு கடைசி நேரத்தில வருத்தக்காரருக்கு இடம் குடுத்த குற்றத்துக்காக பழியையும் சுமந்து கொண்டு, ஊமை மாதிரி பெரியாஸ்பத் திரிக்காரர் இருந்திட்டினம். பிரைவேட் ஆஸ்பத்திரிக்காரர் தங்கட லாபத்துக்காக கொஞ்சச் சம்பளத்தோட உதவிக்கு நிக்கிற ஆக்களை வேலைக்கு எடுக்கினம். டாக்குத்தர் இல்லாத நேரங்களில இந்த உதவிக்கு வந்த 'அட் டெண்டர்மார் தான் டாக்குத்தர் மாதிரி நடந்து கொள்ளுறதாலையும், பிரைவேட் ஆஸ்பத்திரியளில கனக்க பிரச்சினையள் வருகுது. சில பிரைவேட் ஆஸ்பத்திரியளின்ர நிர்வாகமும் அதுகளைக் கண்டும் காணாடு மாதிரி நடக்கினம் எண்டு சனங்கள் புலம்பகினம். அந்த விசயங்களை நாளைக்கு பாப்பம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.