இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில கடும் போட்டி எண்டது எல்லாருக்குமே வடிவாத் தெரியும். அதால எலக்சனில நிக்கிறவை எங்கை யெல்லாம் வாக்குகள் கிடைக்குமோ அதுகளை மிஸ் பண்ணாமல் தங்கடபக்கம் விழவைக் கோணுமெண்டு படாதபாடு படுகினம்.முந்தி யெல்லாம் ஆரும் ரண்டு பேருக்குள்ளதான் போட்டி இருக்கும். மற்றவையெல்லாம் 'நாங்களும் எலக்சன் கேட்டம்' எண்டு விலாசம் காட்டுறதுக்காக ஒப்புக்குச் சப்பாணியாத்தான் போட்டி போடுறவை. ஆனால் இந்தமுறை எல் லாமே தலைகீழ். சஜித், ரணில், அநுர. நாமல் எண்டு நாலு முனைப்போட்டி, ஆருக்கு வாக்குப் போடுறதெண்டு சனத்துக்கே கடும் குழப்பம்தான் வரப்போகுது.அதால சிங்களச் சணத்தை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல், தமிழ், முஸ்லிம் சனத் தின்ர வாக்குகளையும் ஒவ்வொண்டா எண்டா லும் பொறுக்கோணும் எண்டு எல்லாரும் குத்தி முறியினம்.
எண்டாலும் அரசனை நம்பி புருசனைக் கைவிடக்கூடாதெண்டதிலையும் சிங்கள வேட்பாளர்மார் கவனமாத்தான் இருக்கினம். அதால தான் இப்ப பகிரங்கமா ஒரு வாக்குறுதியும் குடுக் காமல் தனித்தனியா ஆக்களைக் கூப்பிட்டுக் கதைக்கினம். அதிலையும் தமிழ்ப் பொதுவேட்பாளருக்காண்டி உருவான கட்டமைப்புக்காரரை தனித்தனியாப் பிரிச்சு தங்கடபக்கம் வளைக்கிற துக்கும் ஏற்பாடுகள் நடக்குது. அதின்ர ஒரு கட்டம் தான், கட்டமைப்பில இருக்கிற கட்சியளை ரணிலார் முதல்நாளும், சஜித்தார் அடுத்தநாளும் தனியக் கூப்பிட்டு 'டீல்' பேசியிருக்கினம். எந்தப் பக்கம் 'டீல்' படியுதோ அந்தப்பக்கம் சப்போர்ட் பண்ணுவம் எண்டதுதான் கட்டமைப்பில இருக்கிற கட்சிக்காரரின்ர திட்டம். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுறதில உந்தக் கடசிக்காரர் கெட்டிக்காரர்.
உந்தக் கட்சிக்காரரின்ர மதில்மேல் பூனைத் தனம் தெரிஞ்சுதான், கட்டமைப்பில சேர்க்கேக்க சிவில் சமூகக்காரர் சைன் எல்லாம் வாங்கினவை. ஆனால் இப்பிடி எத்தினை ஒப்பந்தங்களை அந்தக் கட்சிக்காரர் கண்டிருப்பினம். சைன் வைச்ச சூடு ஆறமுதலே ரணிலார் எப்ப கூப்பிடுவார், சஜித் எப்ப சாப்பாடு போடுவார் எண்டு காத்துக்கொண்டிருந்த மாதிரி ஓடிப்போய் சந்திச்சு. டீல் பேசிப்போட்டு, 'ரணில் சமஷ்டி தர ஓமாம். சஜித் 13க்கும் அங்காலபோக ரெடியாம்' எண்டு கதை வேற. எங்களைச் சிங்களவர் ஏமாத்தினதை விடவும் எங்கட ஆக்கள் ஏமாத்தினதுதான் கூட. இப்பிடி ஏமாத்துறது கட்சியளுக்கும். ஏமாறுறது எங்கட சனத்துக்கும் பழக்கமாப் போட்டுது கண்டியளோ.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.