📌#புதினம்_தெரியுமோ?
நுணல் மட்டுமில்லை டாக்குத்தர் அர்ச்சுனாவும் தன்ர வாயால கெடுவார் எண்டது உண்மையாப் போச்சுது. போன் கோல் ரெக் கோர்ட் பண்ணியே கனபேரின்ர வண்ட வாளத்தை வெளியில கொண்டந்த அர்ச்சுனா, கடைசியில அதே கோல் ரெக்கோடிங் கிலையே மாட்டுப்பட்டதுதான் பரிதாபம்.
இவ்வளவுநாளும் 'மாபியா, சிந்துஜா. ஊழல், மோசடி, சிஸ்டம்' எண்டு ஒரு மீட்பர் மாதிரி கதைச்சவரின்ர உண்மை முகத்தை ஒரேயொரு ரெலிபோன் கோல் காட்டிக்குடுத் துட்டுது.
ஜே.வி.பி.யில சேர்ந்து இயங்கிற ஒரு பொம்பிளை டாக்குத்தர் மூலமா அநுரகுமார திஸநாயக்கவோட அர்ச்சுனா போட்டடீலின்ர ஓடியோ ரெக்கோடிங்க் தான் நேற்று 'லீக் ஆகியிருக்கு.
நான் அநுரவுக்கு சப்போர்ட் பண்ணினால் தமிழ்ச் சனத்தின்ர வாக்குகளை லட்சக்கணக்கில எடுத்துக் குடுப்பன். என்னை பேஸ்புக்கில மட்டும் 95 ஆயிரம் பேருக்கு மேல ஃபலோ பண்ணுகினம். பகிடி என்னெண்டால் அமைச்சர் டக்ளஸுக்கு கூட 10 ஆயிரத்துக்கும் குறைவான ஆக்கள் தான் ஃபலோ பண்ணு கினம். அப்பிடியெண்டால் என்ர பவர் என் னெண்டு விளங்கியிருக்கும்.
நான் என்ன சொன்னாலும் வெளிநாட்டில இருக்கிற தமிழ் ஆக்கள் அப்படியே கேப்பினம். நான் ஆருக்கு வோட் பண்ணச் சொல்லுறனோ அவைக்குத்தான் வோட் பண்ணுகினம். அப்பிடி நான் அநுரவுக்கு சப்போர்ட் பண்ணுறதெண்டால் அம்பது கோடி ரூபா தரோணும்.
இதுதான் அந்த ரெக்கோடிங். ஆனால் இது பிளான் பண்ணி தன்ர பேரைக் கெடுக்கிறதுக்காக வெட்டி, ஒட்டி எடிட் பண்ணி போட்டிருக்கினம் எண்டு அர்ச்சுனா பேஸ்புக்கில ஒப்பாரி வைக்கிறார். ஆனால் அவர் சொன்னதை வேற ஆரோ வெட்டி, ஒட்டி பிழையா மாத்தி இருக்கினம் எண்டால், அர்ச்சுனா தன்னட்ட இருக்கிற ஒரிஜினல் ரெக்கோடிங்கை நேற்றே பேஸ்புக்கில விட்டிருப்பார். அதுதான் அவரின்ர ஸ்ரைல். ஆனால் அவர் இன்னமும் ஒரிஜினல் ரெக்கோடிங்கை விடேலை. அப்ப அவரில் ஏதோ கள்ளம் இருக்கெண்டுதானே பொருள்? ரெக்கோடிங்குக்கே ரெக்கோடிங்க் இருக்கெண்டதை டாக்குத்தர் புரிஞ்சு கொண்டால் சரி.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.