ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம். இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபமெண்ட கதைதான் இப்ப யாழ்ப்பாணக் கம்பஸில நடக்கிற கதகளியளைப் பாக்கேக்க நினைவுக்கு வருகுது. ராக்கிங் எண்டவதையை இல்லாமல் ஆக்கினால் தான், கம்பஸ் உருப்படும் எண்டு காலகாலமாச் சொல்லி, இப்ப ஓரளவுக்கு ராக்கிங் எண்டதையே யாழ்ப்பாணத்தில இல்லாமல் ஆக்கிப்போட்டினம். ஆனால் 'ராக்கிங் இருந்தால் தான் கம்பஸில பெடியள் ஒழுக்கம இருப்பினம் . இப்ப ராக்கிங் இல்லாததால கண்டபடி ஆடுறாங்கள்' எண்டு அங்க படிக்கிற பொம்பிளைப் பிள்ளையளே சொல்லுகினம். இப்பிடி ராக்கிங்கை திரும்ப கூப்பிடுறளவுக்கு அப்பிடி என்னதான் கம்பஸில நடக்குது?
முந்தியெண்டால் பைனல் இயர் (நான்காம் வருடம்) படிக்கிற ஆக்கள் தான் கம்பஸில எல் லாருக்கும் ஓர்டர் போடுவினம். சீனியரைக் கண் டாலே ஜூனியர்மாருக்கு குலைநடுங்கும். சீனியர் என்ன சொன்னாலும் அதைக் கேட்டு நடப்பினம்.அதால லெக்சர்மாரும். கம்பஸ் நிர்வாகக்காரரும் எதையும் பெடியளுக்கு சொல்லோணுமெண்டால் அதை சீனியர்ஸ் மூலம் தான் சொல்லிச் செய்விப்பினம். அப்பதான் அந்த வேலை சரியா நடக்கும். ஆனால் இப்ப அதெல்லாம் தலைகீழாம். இரண்டாம் வருடம் படிக்கிற ஆக்களே சீனியர்ஸோட கொழுவல் எடுக்கினமாம்.
போன சனிக்கிழமை கம்பஸில ஒரு 'கோயிங் டவுன் பார்ட்டி, ஏழுமணிக்கே முடிக்க வேண்டிய பார்ட்டியை 8 மணி தாண்டியும் இழுத்திருக்கினம். 'டீஜே' பார்ட்டி எண்டதால எல்லாரும் ஆடவும் தொடங்கிட்டினம். நேரம் ஏற ஏற . உள்ளுக்க போனதும் ஆக்களுக்கு ஏத்தியிருக்கு. அந்த சுதி யில கொஞ்சம் கொஞ்சமா தங்களுக்குள்ள கதைக்க வெளிக்கிட்டு, அந்தக் கதை முத்தி தேர்ட் இயருக்கும்', 'பைனல் இயருக்கும்' அடிபாடா மாறிப் போட்டுது. 2 பேருக்கு மண்டை உடைஞ்ச தெண்டும் கதை. அதைவிட உள்ளுக்க அடிவாங் கின ஆக்கள் கம்பஸில படிக்காத வெளிப்பெடிய ளுக்கு அடிச்சு விசயத்தைச் சொல்ல, அவங்கள் கம்பி, பொல்லோட கம்பஸுக்கு வெளியில வந்து குவிஞ்சிருக்கினம். பிறகு ஒருமாதிரி டீனுக்கு அறிவிச்சு. அவர் வந்து தான் விலக்குப் பிடிச்சு, அந்தப் பார்ட்டி இன்னும் ரத்தக்களறி ஆகாமல் நிப்பாட்டினதாம். ஆனால் உந்தக் கம்பஸ் சண்டை ஒருநாளோட முடியிறதில்லைத்தானே? பிறகும் தொடர்ந்திருக்கு. அதால வந்த விசயங் களைப் பார்த்திட்டுத்தான் 'பேசாமல் ராக்கிங்கை ஒழிக்காமல் விட்டிருக்கலாம்' எண்டு கம்பஸில படிக்கிற நோக்கத்தில போன பிள்ளையள் கதறுதுகள், உந்த 'டீஜே' பார்ட்டி சண்டைக்குப் பிறகு அப்பிடி என்ன சம்பவங்கள் நடந்ததெண்டு திங்கக்கிழமை பாப்பமோ?
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.