யாழ்ப்பாணத்தில் ஒருகாலத்தில பெரியாஸ்பத் நிரியை விடவும் பேமஸா இருந்த பிரைவேட் ஆஸ்பத்திரி அது. அதைப் பிரைவேட் ஆஸ்பத்திரி எண்டும் சொல் லேலாது. ஏனெண்டால் அதைத் தனி ஒராள் நடத் தேலை. பொதுவான அமைப்ப ஒண்டுதான் நடத்துது. முந்தி என்ன வருத்தமெண்டாலும் சணம் அங்கதான் ஓடிப்போகும். அந்தளவுக்கு அங்க ட்ரீட்மெண்ட் தரமா இருந்தது. அந்த ஆஸ்பத்திரியாலதான் அந்த ஊருக்கே ஒரு பெருமையும் இருந்தது. ஆனால் இப்ப எல்லாம் பழங்கனவாப் போட்டது. இப்ப அது எந்த ஆஸ்பத்திரி எண்டு 'மூளை' உள்ளவை கண்டுபிடிச்சிருப்பியள்.
அந்த பிரைவேட் ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில அரசாங்க ஆஸ்பத்திரியளும் பெரிசா இல்லை. கொஞ்சம் தூரத்தில தான் இருக்குது. அந்த அரசாங்க ஆஸ்பத்திரியனிலையும் ஒண்டில வார்ட் வசதி இல்லை, மற்றநில சரியான வளங்கள் இல்லை. அதால அங்கத்தைச் சனங்கள் இப்பவும் பழைய நினைப்பில ஏதும் வருத்தம். துன்பம் எண்டால் அங்கதான் ஓடிப்போகினம். ஆனால் அங்க இரவில நிக்கிற நேர்ஸ்மாருக்கும். அட்டெண்டர்மாருக்கும் போன் பாக்கவே நேரமில்லை. அதோட அவையள் போன் பார்த்த களைப்புக்கு கண்ணுக்கு ஓய்வு குடுக்க வடிவா நித்திரையும் கொள்ளத்தானே வேணும். அதுக்குள்ள வருத்தக்காரர் காயம், ரத்தம், பித்தம், வயித்துக்குத்து எண்டு போனால் அவைக்கு கோபம் வரத்தானே செய்யும். அதால காய்ச்சல் எண்டு ஆரும் போனாக்கூட 'உடன பெரியாஸ்பத்திரிக்கு போங்கோ" எண்டதுதான் அவையின்ர மந்திரமா இருக்கும். அங்க வேலை செய்யிற எல்லாருக்கும் வருத்தக்காரருக்கு ட்ரீட்மெண்ட் செய்யிறதைப் பழக்கிறதை விடவும் உடன பெரியாஸ்பத்திரிக்கு போங்கோ" எண்டு சொல்ல மட்டும் தான் பழக்கியிருக்கினம் போல. அப்பிடி ஒரே சொல்லையே எல்லாருக்கும் சொல்லுறதுக்கு இப்பிடி காசைக் கொட்டி ஆக்களை வேலைக்கு வைச்சிருக்கிறதை விட ஒரு கிளியைப் பிடிச்சு உடன பெரியாஸ்பத்திரிக்கு போங்கோ எண்டு சொல்லப்பழக்கி விட்டால் செலவு மிச்சமெல்லோ.
இந்த ஆஸ்பத்திரியில வேலை செய்யிறவைக்கும் சம்பளம் அப்பிடி இப்பிடித்தான் குடுபடுதாம். அதால தான் அவையும் இப்பிடி பெரியாஸ்பத்திரிக்கு வருத்தக்காரரைக் கலைச்சு விடுகினமோ தெரியேலை, அதோட அவைக்கு அனுபவமும் குறைவு, கிட்டடியில் ஒராளுக்கு யூரினை பையுக்குள்ள போக விடுறதுக்காக ஆணுறுப்பில 'டிதீற்றர் கொழுவி விடோணும். ஆனால் அங்க நிண்டவைக்கு அதில அனுபவம் குறைவு. உண்மையில் கதீற்றர் கொழுவ வேணும் எண்டால் ஒரு பாக்குத்தரும் நிக்கோணும். அதையெல்லாம் அந்த ஆஸ்பத்திரியில் எதிர்பாக்கமுடியாது. 'அட்டெண்டர் தான் டாக்குத்தர், நேர்ஸ் தான் சேர்ஜன் 'எண்ட நிலைமைதான் அங்க அதால தீற்றரை கொழுவேக்க ஏதோ மாறிக் கொழுவிப் போட்டினம். வருத்தக்காரருக்கு ரத்தம் ஒழுகத் தொடங்கிட்டுது. பிறகென்ன. 'உடன பெரியாஸ்பத்திரிக்கு போங்கோ" எண்ட பழக்கப்பட்ட மந்திரந்தைச் சொல்லியிருக்கினம். அந்த வருத்தக்காரரை பெரியாஸ்பத்திரிக்கு கொண்டுபோனால், சாறம் முழுக்க ஒரே ரத்தமயமாம். கொஞ்சமெண்டால் ஆள் முடிஞ்சிருக்கும், பெரியாஸ்பத்திரியில் பழி விழுந்திருக்கும். நல்லகாலத்துக்கு உட்ண்டியா ட்ரீட்மெண்ட் செய்து ஆனைக் காப்பாத்திப் போட்டிணமாம்.
அந்த ஆஸ்பத்திரியை மேற்பார்வை செய்ய இரண்டரை லட்சம் ரூபா சம்பளத்தில பெஞ்சன் எடுத்த பெரியடாக்குத்தர் ஒருத்தர் இருந்தும், இப்பிடி அனுபவமில்லாத. ஆக்களோட சனத்தில அக்கறையில்லாமல் அந்த ஆஸ்பத்திரி இயங்குதெண்டால் என்னத்தைச் சொல்ல?
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.