கணவன்; மனைவி படுகாயம்!
(புதியவன்)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணையில் இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் கணவன் மற்றும் மனைவி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அல் ஹாஜ் ஹலால்தீன் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் கொழும்புக்கு சென்று திரும்பிய போது மகிழுந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அவர்களோடு பயணித்து மூன்று பிள்ளைகளும் எவ்வித காயங்களின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.