ஜனாதிபதித்தேர்தல் நெருக்கிக்கொண்டிருக்கும் நிலையில் பிரதான வேட்பாளர்கள் தங்கள் பரப்புரை களைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இம்முறை பிரதானமான மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரைத் தீர்மானிக்க, வாக்கெண்ணலில் இரண்டாம் கற்றுக்குச் செல்லவேண்டியிருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் இருப்பதால் தேர்தல் திகதி நெருங்க நெருங்க பரப்புரைகள் புயல் வேகமெடுக்கும் என்று நம்பலாம். இம்முறை பிரதான வேட்பாளர்கள் எவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் எதிர்பார்ப்புகள் தொடர் பான தங்களின் முடிவுகளைப் பகிரங்கமாக அறிவிக்காததிலையில், தேர்தல் அறிக்கைகளை ஆராய வேண்டிய சூழ்நிலை எழுத்திருக்கின்றது. கடந்த காலங்களில் தெற்குத் தலைமைகள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கும் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களைத் தேர்தல் முடித்ததும் சுடாசிவிடுவது தான் வழமை தமிழ் மக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் அவர்கள், தங்கள் காரியம் முடிந்ததும் அவற்றைக் கணக்கில் எடுப்பதில்லை. இப்படியான ஏராளமான கசப்பான அனுபவங்கள் தமிழ் மக்களுக்கு இருக்கின்றன.
பிரதான வேட்பாளர்களில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தனது தேர்தல் அறிககையை வெளியிட்டிருக்கின்றார். பல்வேறு விடயங்களை உள்ளடக்கியுள்ள தோதல் அறிக்கையில் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பான சமஷ்டியை அவர் ஓரங்கட்டியிருந்தாலும், வடக்கு கிழக்குடன் தொடர்புடைய பல விடயங்களை அனுரகுமார தொட்டிருக்கின்றார். அவற்றின் நடைமுறைச் சாத்தியங்கள் தொடர்பாக சந்தேகங்கள் இருக்கின்றபோதும், அந்தத் தேர்தல் அறிக்கை சற்று நிதானித்துக் கவனிக்கத்தக்கதாக இருக்கின்றது என்பது பலரது கருத்து மற்றைய இரு பிரதான வேட்பாளர்களான ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் தற்போதைய ஜனாதிபதியும், சுயேச்சை வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தேர்தல் அறிக்கைகள் இன்னமும் வெளியாகவில்லை. அவற்றில் வடக்கு கிழக்கு எந்தளவு தூரம் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை அறிய பொறுத்திருக்க வேண்டியிருக்கின்றது. மறுபுறத்தில், தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஒருமித்த குரலில் வெளிப்படுத்தும் நோக்குடன் களமிறக்கப்பட்டுள்ள தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் அறிக்கையும் எதிர்வரும் நாள்களிவேயே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தெற்கில் தேர்தல் பரப்புரைகள் புயல் வேகத்தில் நடக்க, தமிழர் தரப்பில் தோதல் நடவடிக்கைகள் அன்ன நடையிலேயே இடம்பெறுகின்றன.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே இருக்கும் நிலையில், வெற்றியாய்ப்புள்ள வேட்பாளரைக் கணிப்பது தடுமாற்றமாகவே இருக்கின்றது தமிழ் அரசியல் தரப்புகள் மத்தியிலும் இன்னமும் ஒருமித்ததீர்மானம் எட்டப்பட்டதாக அறியமுடியவில்லை. தமிழ் மக்களின்யாகிருகளுதில் இருந்து. தூண்டில்கள் வீசப்படலாம். இனி வெளியாரும் தோதல் அறிக்கைகளிலும் பல சலுகைகள் உள்ளடக் கப்படும் என்பதை நம்பலாம். அவற்றை அறிவார்ந்து ஆராய்ந்து சிந்தித்துச் செயற்படவேண்டியவர்கள் வாக்காளர்களே, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாக அவர்கள் பயன்படுத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.