மதுரை மாவட்டம் கட்டாரபாளைம் பகுதியில் விசாகா என்கிற பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. விடுதியில் இன்று அதிகாலை குளிர்சாதன பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.
உடனே, அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததும், விரைந்து வந்த தீயணைப்பு வீரரக்ள் தீயை அணைத்தனர். முதற்கட்ட தகவலின்படி, பிரீட்ஜ் வெடித்து அதில் உள்ள சிலிண்டர் மூலமாக வெளியேறிய நச்சுப் புகையால் 5 பேர் மயங்கி விழுந்தனர்.
அதில், சரண்யா, பரிமளா ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர், மேலும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 பெண்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
விடுதியை காலி செய்யக் கோரி கடந்த ஆண்டே மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால், அந்த நோட்டீஸை பொருட்படுத்தாமல் விதிகளை மீறி நடத்தி வந்ததாக தெரிகிறது.
தற்பொழுது, சம்பவ இடத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் நேரில் ஆய்வு நடத்தினார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர், விபத்து தொடர்பாக விடுதி உரிமையாளர் இன்பா என்ற பெண் கைது செய்து, காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதி வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகியோருக்கு சிகிச்சை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.