இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் பாங்கர், சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். அவரது மகன் பற்றிய தகவல் தற்போது விளையாட்டுத்துறையில் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சஞ்சய் பாங்கருக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறார். இவரும் கிரிக்கெட் வீரர்தான்.
தற்போது அவரது இணையதளப்பக்கத்தில் கடந்த 9 மாதங்களில் ஆணாக இருந்து பெண்ணாக மாறியிருப்பதாகவும் தனது பெயரை ஆர்யன் என்பதை அனயாவாக மாற்றியுள்ளதாகவும் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதில், தனது இளம் வயதிலிருந்து கிரிக்கெட் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. என் தந்தை இந்திய அணியில் விளையாடியது, பயிற்சியாளராக இருந்தது எனக்குள் கனவு தொடங்கியது.
அவரின் போரார்வம், ஒழுக்கம், அர்ப்பணிப்புகள் விளையாட்டின் மீது காட்டியது எனக்கு உத்வேகமாக இருந்ததால் கிரிக்கெட் என் காதல், லட்சியம் எதிர்காலமானது.
ஒருநாள் அவரைப்போல் என் நாட்டை பிரிதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என் முழு வாழ்க்கையையும் திறமையையும் மெருகேற்றுவதற்காகவே செலவிட்டேன். நான் விரும்பிய கிரிக்கெட்டை விட்டுவிடுவதை நான் ஒருப்போதும் நினைக்கவில்லை.
ஆனால் இங்கே நான் வலியான ரியாலிட்டியை எதிர்கொண்டு வருகிறேன். ஹார்மோன் மாற்று சிகிச்சையால் ஒரு பெண்ணாக மாறியதில் என்னுடைய உடல் கடுமையாக மாறிவிட்டது.
என்னுடைய தடகள விளையாட்டுத்திறன்களை இழந்து நீண்ட நாட்களாக நான் விரும்பிய விளையாட்டு என்னைவிட்டு நழுவி வருகிறதாக அந்த பதிவில் அனயா தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் அவருக்கு ஆறுதலான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.