அன்டார்டிகாவில் பென்குயின்கள் வாழும் இரு தீவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்துள்ளார்.
அமெரிக்க பொருட்கள் மீது அதிக இறக்குமதி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்கள் கடந்த 2ஆம் திகதி ட்ரம்பால் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த பட்டியலில் அன்டார்டிகாவில் உள்ள ஹியர்ட் மற்றும் மெக்டொனால்ட் ஆகிய 2 தீவுகள் இடம் பெற்றுள்ளன. இந்த தீவுகளில் பென்குயின் பறவைகள் மட்டுமே வாழ்கின்றன. அவுஸ்திரேலியாவின் தென்மேற்கே 4000 கிலோமீற்றர் தொலைவில் இத்தீவுகள் அமைந்துள்ளன. பேர்த்திலிருந்து படகு மூலம் ஏழு நாள் பயணம் மேற்கொண்டு மாத்திரம் இங்கு செல்ல முடியும். , கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக மனிதர்கள் அங்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களே வசிக்காத இரு தீவுகளுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்துள்ள நிலையில், இதுதொடர்பாக எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நகைச்சுவைப் பதிவுகள் வைரலாகப் பரவி வருகின்றன.
கனடாவை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் 10 சதவீத வரி விதிப்பால் பென்குயின்கள் கண் கலங்கி நிற்கின்றன. ஜனாதிபதியிடம் நேரடியாக நியாயம் கேட்கின்றன. எங்கள் மீதான வரிவிதிப்பை ரத்து செய்யுங்கள் என்று ட்ரம்பிடம் பென்குயின்கள் மன்றாடுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.