ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகரிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பேருந்துடன் தலைக்கவசம் அணியாமல் கண்ணகி நகர் வழியே மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இவ்வாறாக படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த நபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரத்தில் வசிக்கும் 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ராஜேந்திரன் கௌதமன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.