நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது.
மாவட்ட செயலாளர் அலுவலகம், தேர்தல்கள் ஆணையக காரியாலயம், பொலிஸ் மா அதிபர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளுக்கும் இன்றைய தினம் தபால் மூல வாக்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தினத்திற்கு மேலதிகமாக உரிய அலுவலகங்களின் ஊழியர்கள் நவம்பர் மாதம் 4ம் திகதி தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் நவம்பர் மாதம் முதலாம் மற்றும் 4ம் திகதிகளில் முப்படை முகாம்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவன அதிகாரிகளும் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
குறித்த இரு தினங்களிலும் தபால் மூலம் வாக்களிக்க தவறுபவர்களுக்கு தமது சேவை நிலையத்திலுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
தபால் மூல வாக்களிப்புக்கென நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்த முடியாதெனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
பயன்படுத்தப்பட்ட தபால் வாக்களிப்பு அட்டை அடங்கிய பொதியை பொறுப்பேற்கும் பணிகளும் இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.