நாட்டுக்கும், மக்களுக்குமான பொருத்தமான அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியான இளைஞர்கள் மாற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி திருவையாற்றில் இடம்பெற்ற இளைஞர்களுடான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இந்த நாடாளுமன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் மகிழ்ச்சியளிக்கிறது. புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி அவர்கள் சிந்திக்கவும், செயற்படவும் தொடங்கியிருகின்றார்கள். கடந்த 15 அவர்கள் பயணித்த அரசியல் பாதையில் இருந்து விலகி பொருத்தமான அரசியல் வழியை பின்பற்ற தொடங்கியுள்ளனர். கடந்த காலங்களில் இந்த இளைஞர்கள் தாங்கள் நம்பி பயணித்த அரசியல் தலைமைகள் அவர்களை நட்டாற்றில் விட்டது போல விட்டுச் சென்றுள்னர். இளைஞர்கள் எதிர்பார்த்த எதுவும் நிறைவேற்றப்படவில்லை.அவர்களை உசுப்பேற்றி, வாக்குகளை அபகரித்து பதவிகளுக்கு வந்தவர்களால் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதன் காரணமாக ஏற்பட்ட கோபமும் விரக்தியும் தான் மாவட்டத்தின் இளைஞர்கள் எங்களின் அரசியல் வழியை ஏற்றுக்கொண்டு பயணிக்க முன்வந்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் ஐந்து வருடங்கள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின்
நிமிர்த்தமே இளைஞர்கள் மாற்றத்தை நோக்கி செயற்பட காரணமாக அமைந்துள்ளதனை அவர்களின் கருத்துக்களில் இருந்து அறிந்துகொண்டேன். ஆகவேதான் நான் இம்முறை அதிகாரத்திற்கு வந்தவுடன் இளம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை நிச்சயம் நிறைவேற்றுவேன். இது வெறும் வார்த்தைகளாலும், அறிக்கைகளாலும், உணர்ச்சி பேச்சுக்களாலும் அரசியல் செய்பவன் நானல்ல என்பதனை இளைஞர்கள் விளங்கிக்கொண்டுள்ளனர்.
எனவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் அவர்களுக்கான அபிவிருத்திகளையும் மேற்கொள்ள உழைப்பேன் என்பதனையும் நான் உத்தரவாதமாக கூறுகின்றேன் - என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.