[புதியவன்]
நடிகர் ரன்பீர் கபூர் தன் மகள் பெயரை பச்சை குத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
ஹிந்தி திரையுலகின் நட்சத்திர ஜோடி ரன்பீர் கபூர்- ஆலியா பட். இவர்களின் குழந்தை ராஹா கபூருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். குழந்தை பிறந்ததும் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்தார் ரன்பீர் கபூர். ராஹா மீது அதீத அன்பு வைத்திருக்கும் ரன்பீர் தனது மகளின் பெயரை தோள்பட்டையில் பச்சை குத்தியிருக்கிறார்.
மும்பையில் ஆலியா- ரன்பீர் கட்டி வரும் சொகுசு பங்களாவை ராஹா பெயரில் பதிவு செய்யப் போவதாகவும் இதன் மூலம் ஹிந்தி திரையுலகின் பணக்கார குழந்தையாக ராஹா இருப்பார் என்ற செய்திகளும் சமீபத்தில் இணையத்தை ஆக்கிரமித்து இருந்தது.
இந்த பங்களாவின் மதிப்பு மட்டும் சுமார் ரூ. 250 கோடி என்கின்றனர். ராமாயணம் கதையை தற்போது படமாக்கி வருகின்றனர். இதில் ரன்பீர் தான் ராமனாக நடிக்கிறார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.