கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று (10) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 10 பேரையும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித், பொரலஸ்கமுவ விமலானந்த தேரர் மற்றும் சீவாலி தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.