மன்னாரில் கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை அடையாளம் காணப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேகநபர்களை இனங்காணும் நடவடிக்கைகளில் புலனாய்வுப் பிரிவினர் பணியாற்றிவரும் நிலையில், பொதுமக்களிடம் இருந்தும் தகவல்களைப் பெறும் நோக்கில் சந்தேககநபர்களின் வரையப்பட்ட படங்களை பொலிஸார் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் மன்னார் பொலிஸ் தலைமையக அதிகாரியின் 0718591363 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ, மன்னார் பொலிஸ் நிலையத்தின் 0232223224 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அழைப்பெடுத்துத் தெரிவிக்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி வெளிநாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.