மாறும் முகங்கள்
மாறும் முகங்கள்

'நல்லிணக்கச் செயன்முறையானது பாதிக்கப் பட்ட தரப்பினரை மையப்படுத்தியதாகத்தான் அமைய வேண்டும். அது அவசியம்' என்று இயம்பியிருக்கின்றார் இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் சன்டைல் எட்வின், அவ்வாறான ஒரு பொறிமுறையை இறுக்கமா கப்பின்பற்றியதால்தான், இனவெறிமற்றும் நிறவெறியில் இருந்து தென்னாபிரிக்காவால் இலகுவாக மீளமுடிந்தது என்றும் வெளிப்படுத்தியிருக்கின்றார் அவர். இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில், தென்னாபிரிக்கத் தூதுவர்களும், இராஜதந்திரிகளும், அதிகாரிகளும் கருத்துகளை வெளிப்படுத்துவது இது வொன்றும் முதல்முறையல்ல. 'தென்னாபிரிக்கப் பொறி முறையைப் பின்பற்றிய வகையிலான நல்லிணக்க முயற்சி" என்று என்றைக்கு கொழும்பு புறப்பட்டதோ, அன்று முதல் இந்த விடயத்தில் தென்னாபிரிக்காவின் பார்வை மிகக்கனதியாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆனால், தூதுவர் சன்டைல் எட்வின் இப்போது வெளிப்படுத்தி யிருக்கும் கருத்துகளின் 'காலப் பின்னணி' மிகக் கச்சிதமானது. ஸ்ரீலங்கா இராணுவத்தை சர்வதேசநீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒருபோதும் அதற்கு இடமளியோம் என்று நாமலும், ஸ்ரீலங்காவில் போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட எவரும் தமது ஆட்சியிலோ அல்லது தம்மாலோ தண்டிக் கப்படமாட்டார்கள். மாறாக போரின்போது என்ன நடந்தது? என்பதற்காக மட்டுமே விசாரணைகள் நடத் தப்படும் என்று அநுரவும் தெரிவித்திருக்கும் பின்னணி யிலேயே, நல்லிணக்கப் பொறிமுறையானது பாதிப்புற்ற வரின் தளத்திலிருந்து சிந்திக்கப்பட வேண்டிய விடயம் என 'இடம்,பொருள், ஏவல்' பார்த்து விளாசியிருக்கின்றார் சன்டைல் எட்லின்

பெரமுனவின் முகாம். ஒருபோதும் போர்க்குற்றங்களையோ அல்லது இனப்படுகொலையையோ ஏற்றுக் கொண்டதில்லை போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டவர்களில் 80 வீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பெரமுனவின் பின்னணியைக் கொண்டிருப்பவர்கள் என்பதால், சர்வதேச விசாரணை, போர்க்குற்றம், இனப்படுகொலை, நீதிப்பொறிமுறை, சாட்சியத் திரட்டல்கள், குற்றவியல் நீதிமன்றம் இவ்வாறான சொற்பதங்களே அந்தக் கட்சிக்கு 'நிலுவையைக் கண்ட பேயின் நிலைதான்' ஆதலால், நாமலின் கருத்துகளின் மட்டில் ஆச்சரியக் குறிக் கோடுகாட்டல்களில் அர்த்தம் இல்லை.

ஆனால், அநரகுமார திஸாநாயக்கவின் நிலையோ அவ்வாறில்லை. திங்களன்று வெளியான தேர்தல் விஞ்ஞாபனத்தில், இலங்கையின் இனப்பிரச்சினை மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தன் ஆழ மான பார்வையை அநுர காத்திரமானதாகவே வெளிப்படுத்தியிருந்தார். இனவாதத்தின் இதயத்துடிப்பைக் கண்டறிந்து அதைக் களையும் செயற்றிட்டங்களை அவர் வரிக்குவரி முன்வைத்திருந்தார். தொலைதூரத்தில் நம்பிக்கைக் கீற்றொன்று அந்தத் தேர்தல் அறிக்கையில் வெளிப்படவே செய்தது ஆனால், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வெறும் 24 மணிநேரத்துக்குள்ளாக, போர்க் குற்ற விசாரணை என்பது போரில் என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே அன்றி, போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல' என்று தெரிவித்து பிறிதொரு தரப்பைத் திருப்திப்படுத்தி யிருக்கின்றார் அவர். இலங்கையில், இனவாதத் தீயின் இருப்பே இத்தகைய திருப்திப்படுத்தும் போக்குத்தான். அத்தகைய அபத்தமான அரசியலில் அநாவொன்றும் விதி விலக்கல்லர் என்பதைத்தான் அவரது இறுதி நேர்காணல் கட்டியம் செய்திருக்கின்றது. போவியான நம்பிக்கையை விடவும், நேர்படியான நிராகரிப்பு பலமடங்கு பரிசுத்தம் என்பர். உண்மையான நம்பிக்கையா? அல்லது நேர்படி யான நிராகரிப்பா? இரண்டில் ஒன்றை அநுர தெளிவாக வரையறுத்துக்கொள்ளவேண்டும்.

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

306 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.