(மாதவன்)
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், முன்மொழிவுகள் பற்றிய சிறப்பு கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை மாற்றுத்திறனாளிகள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் ஒன்றியத்தின் இணைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மதுரவிதானகே, இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பத்திரகே, தேசிய ஐனநாயக நிறுவனத்தின் ஆலோசகர், யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ், வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன், பிரதேச செயலர்கள், உத்தியோகத்தர்கள் மாற்றுவலுவுள்ளோர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்து கொண்டனர். (ச)
(ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.