நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (20) காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இன்று காற்றின் தரம் 42 - 68க்கும் இடையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அனைத்து நகரங்களிலும் காற்றின் தரம் மிதமான நிலையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம், வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் நல்ல நிலையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகமாகப் போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில், குறிப்பாகக் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் 1 மணி முதல் 2 மணி வரை காற்றின் தரக் குறியீடு (AQI) ஆரோக்கியமற்று காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.