மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகள் முன்னதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த இப்பிரேரணையை மீளாய்வு செய்து கடந்த 8ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்த நிலையில் இதற்கு இரண்டு வார கால அவகாசம் அளிக்குமாறு மின்சார சபை ஆணையத்திடம் தெரிவித்திருந்தது.
அதன்படி, புதிய மின் கட்டண முன்மொழிவு அடுத்த வாரம் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.