[புதியவன்]
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் நடந்தது. அங்கு சில நாட்கள் நடந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னையில் சண்டைக் காட்சியும் பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு கேரளா செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுவரை நடந்த படப்பிடிப்பில் 70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் 40 நாட்களில் மொத்தப் படமும் முடிந்துவிடும் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் தக்லைஃப் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.