மீட்பர் யார்
மீட்பர் யார்

ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைகளில் இம்முறை பொருளாதார நெருக்கடி தொடர்பான விவகாரங்களே முதலிடத்தைப்பெற்றிருக்கின்றன க்கின்றன. கடந்த காலங்க ளைப்போன்று இனவாத அரசியலை தேர்தலின் பிரதான வேட்பாளர்களான மூவரும் கையில் எடுக்கவில்லை. பிரதான வேட்பாளர்கள் கையிலெடுக்காத இனவாதத்தை நான்காவது வேட்பாளராக இறுதி நேரத்தில் நுழைந்து கொண்ட ராஜபக்சக்களின் அரசியல் வாரிசான நாமல் மாத்திரம் முன்கொண்டு செல்கின்றார். ஆனால் அவரது இனவாதப் பரப்புரை கடந்த காலங்களைப்போன்று பௌத்த சிங்கள தேசிய சக்திகளை அவரின் பின்னால் இழுக்கவில்லை. மறுபுறம் விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில போன்றோரின் இனவாதக் கூட்டணியின் வேட்பாளரான திலித் ஜெயவீர கிளப்பிய பௌத்த சிங்கள தேசியவாதமும் பெருமளவில் எடுபடவில்லை.

இவ்வாறானதொரு நிலையிலேயே பொருளாதார மீட்பர் யார் என்ற கேள்விக்கான விடையே இம்முறை தேர்தலின் முடிவாக இருக்கப்போகின்றது. மக்களில் பெருமளவானோர் கடந்தகாலங்களைப் போன்று முற்கூட்டியே தமது வாக்கு யாருக்கு என்பதை முடிவு செய்யவில்லை. தேர்தலன்று பார்ப்போம் எனக் காத்திருக் கின்றார்கள். சிலர் யாருக்காவது வாக்களித்து விட்டுப்போவோம் என்ற மனநிலையிலும் இருக்கின் றார்கள். சரியானதொரு தலைவரைத் தெரிவுசெய்யா விட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளை ஒட்டு மொத்த நாட்டு மக்களும்தான் அனுபவிக்க நேரிடும். 2019ஆம் ஆண்டு நாட்டில் பெருமளவான மக்களின் '69 இலட்சம் வாக்குகளுடன் கோத்தாபய ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தார். அவரால் இந்த நாடு அனுபவித்த நெருக்கடிகளின் விளைவுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே, இம்முறை வாக்கிடப்போகும்போது நாம் வாக்கிடும் நபர், நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பாரா? என்ப தையும் சிந்திக்கவேண்டியிருக்கின்றது. இதற்கு அப்பால், தமிழர்களாக அரசியல் ரீதியான தீர்வு, நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பன தொடர்பாகவும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் வரிசை யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்தேன் என்பதை முன்னிறுத்தியே பரப்புரை முன்னெடுக்கின்றார். நாட்டின் வரிசையுகம் முடிவுக்கு வந்தது அவரால் அல்ல என்றும் இந்தியாவின் கடனுதவியால்தான் அது சாத்தியமானது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் 'குட்டு' வைத்துள்ளார். உண்மையில் கடன்களால்தான் நாடு இப்போது ஓடிக்கொண்டிருக்கின்றது. நாட்டை யாரும் மீட்கவில்லை.

உண்மையான நெருக்கடி 2028 ஆம் ஆண்டுதான் ஆரம்பமாகப்போகின்றது. எமது நாடு வாங்கிய கடன் களையும், வாங்கிக் கொண்டிருக்கும் கடன்களையும் சேர்த்து 2028ஆம் ஆண்டிலிருந்துதான் திருப்பிச் செலுத்த தொடங்கப்போகின்றது. அதற்கிடையில் நாட்டின் உற்பத்தி மேம்பட்டு, வருமானம் அதிகரிக்கவேண்டும். அப்போதுதான் நாட்டுக்கு மேலதிக சுமையாக அமையப் போகும் கடன் மீளச் செலுத்தலை சமாளிக்க முடியும். உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பிலோ நாட்டின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பிலோ அக்கறை காட்டாது விட்டால், நாட்டு மக்களை வதைக்கும் வகையில் வரிகளை அதிகரித்தே கடன்களை மீளச் செலுத்தவேண்டியிருக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இருவரும், ஒட்டுமொத்த சனத்தொகையின் 7 சதவீதமாக இருக்கின்ற அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 35 சதவீதத்தால் அதி கரிப்பதற்கான வாக்குறுதியை முன்வைத்திருக்கின்றனர். இந்தச் சம்பள அதிகரிப்புக்கான நாட்டின் வருவாய் அதி கரிப்பை பற்றி அவர்கள் இருவரும் எதுவும் சொல்லவில்லை. இப்படியான அறிவிப்புகள் ஊடாக வாக்குகளை கவர்ந்திழுக்கலாம். கோத்தாபயவும் அதையே செய்தார். ஆனால் இறுதியில் என்ன நடந்தது? நாட்டின் வருமா னத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை வெளிப்படுத் தாமல் இப்படியான சம்பள உயர்வுகள் ஊடாக, அந்த அரசாங்க ஊழியர்களும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுடன் சேர்ந்து மீண்டும் வரிசையில் நிற்கவேண்டித்தான் ஏற்படும். எனவே ஒவ்வொரு வேட்பாளர்களும் அறிவிக்கும் சம்பள உயர்வுகள் 'நிவாரணங்களின் பின்னால் நாட்டின் வருமானத்தை உயர்த்தும் திட்டங்களை அவர்கள் வைத்திருக்கின்றார்களா என்பதை ஆராய்ந்து வாக்கிட வேண்டும்.

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

280 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.