இளம் சிறார்கள், குறிப்பாக 16 வயதுக்குள்பட்டோர், பேஸ்புக் எனப்படும் முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டொக் போன்ற செயலிகளைப் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து அவுஸ்திரேலியா திட்டமிட்டு வருகிறது.
சமூக வலைதளங்களை, இளம் சிறார்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் வகையில், சட்டம் உருவாக்க அவுஸ்திரேலியா திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.
தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின், மிக மோசமான கன்டென்டுகளை, குழந்தைகள் பார்க்காமல் தடை செய்யும் முயற்சியில் தோல்வியடைந்துவிட்டதாகவும் எனவே, முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டொக் போன்றவற்றை தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் கூறுகையில், இது தாய், தந்தைக்குமானதுதான், உண்மையிலேயே சமூக ஊடகங்கள், பிள்ளைகளை சீரழித்து வருகிறது, தற்போது அதனைத் தடுக்கும் நேரம் வந்துவிட்டது என்கிறார்.
மேலும், நான் எனது கணினியில் வேலை செய்யும்போது, எனக்குத் தேவையில்லாத விஷயங்கள் பாப்அப் ஆகிறது. இதுவே 14 வயது குழந்தைக்கு நேர்ந்தால் என்னவாகும் என்கிறார்.
இந்த ஆண்டு துவக்கத்தில், சமூக ஊடகங்கள், வயது வரம்பை நிர்ணயிக்குமாறு கால அவகாசம் அளித்த்து. ஆனால், அது செயல்பாட்டுக்கு வராததைத் தொடர்ந்து சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த சட்டம் நவம்பர் இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என்கின்றன தகவல்கள்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.