(ஆதவன்)
'போதையற்ற இலங்கையைக் கட்டி எழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வரும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வின் ஓர் அங்கமாக முச்சக்கர வண்டிகளுக்கு ‘107' என்னும் அவசர தொலைபேசி இலக்கம் பொறிக்கும் நிகழ்வு, கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது.
போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை இனங்கண்டதும் உடனடியாக ‘107' என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு பொலிஸாருக்குத் தகவலை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.