(இன்று ஒரு தகவல்)
முடி கொட்டுதல் மற்றும் வளர்ச்சிக்கு சின்ன வெங்காயம் எவ்வாறு உதவுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான பெண்களின் பிரச்சினை என்னவெனில் முடி கொட்டுதல், முடி வளர்வதில் சிக்கல் என்பதை அதிகமாக அவதானித்து வருகின்றோம்.
சிலர் பொடுகு தொல்லையாலும் அவதிப்படும் நிலையில், இதற்காக பல ஷாம்பு மற்றும் கண்டிஷ்னர் இவற்றினை பயன்படுத்தி வருகின்றனர்.
இவை அவ்வளவாக தீர்வு கொடுப்பதில்லை. ஆனால் சின்ன வெங்காயம் முடி பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு அளிக்கின்றது என்பதை தெரிந்து கொள்வோம்
பழங்காலத்திலிருந்தே சின்னவெங்காயம் முடி உதிர்விற்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இவை வேர் பகுதியை வலுப்படுத்தி முடி உதிர்வை தடுக்கின்றது.
இதற்கு காரணம் சின்ன வெங்காயத்தில் இருக்கும் சல்பர் என்ற வேதிப்பொருள் ஆகும். மேலும் இவை முடி வளர்ச்சிக்கு உதவும் கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கின்றது.
மேலும் சின்ன வெங்காயத்தில் இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் பொடுகு தொல்லையிலிருந்தும் பாதுகாக்கின்றது.
மேலும் நரைமுடி பிரச்சனைக்கும் தீர்வு காண வெங்காய சாறு உதவுகின்றது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இளநரை பிரச்சனைக்கும் தீர்வு கொடுக்கின்றது.
வெங்காய சாறை தேங்காய் எண்ணெய்யில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து பின்பு அவ்வப்போது தலைக்கு மசாஜ் செய்து குளிக்கலாம்.
வெங்காய சாறை முடியின் வேர்க்கால்களில் படும்படியாக நன்றாக தேய்த்து மசாஜ் செய்தால் முடி உதிர்வு தடுக்கப்படுவதுடன், முடி அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.