சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 45 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
தம்புள்ளையில் நேற்று மதியம் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் தடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 05 இலக்குகளை இழந்து 324 ஓட்டங்களை பெற்ற போது போட்டியில் இடையில் மழை குறுக்கிட்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 143 ஓட்டங்களையும், அவிஷ்கா பெர்னாண்டோ 100 ஓட்டங்களையும் பெற்று ஒருநாள் போட்டியில் தமது 4ஆவது சதத்தினையும் பூர்த்தி செய்தனர்.
மழை குறுக்கிட்டதால் டக்வத் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 27 பந்துப்பரிமாற்றங்களில் 221 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 27பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் 09இலக்குகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியை தழுவிக்கொண்டது.
எனவே, மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.