முல்லைத்தீவு – மாஞ்சோலை மருத்துவமனைக்கு முன்பாக ஏற்பட்ட தீ விபத்தில் இருகடைகள் முற்றாக எரிந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு கிச்சிராபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மாஞ்சோலை மருத்துவமனை முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் இன்று காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட தீ பரவலால் உணவகம் மற்றும் அருகில் உள்ள கடை தீ முற்றாக எரிந்துள்ளது. அதனையடுத்து அருகே இருந்த கடைகளிலுள்ள பொருட்கள் துரித கதியில் அகற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவம், பொலிஸார், அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் இணைந்து தீயினை கடும் பிரயத்தனத்தின் மத்தியில் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பார்வையிட்டிருந்ததனர்.
இதேவேளை, தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறிபடவில்லை. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை, தீ பரவும் சந்தர்பத்தில் தீயணைப்பு கருவி இல்லாத காரணத்தினலே பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.