முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஔிவிழா நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(19) காலை மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட செயலர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அருட்தந்தை அகஸ்ரின் அடிகளாரால் திருப்பலி பூஜை நடைபெற்று அதன் பின்னர் கிறிஸ்தவம் சார் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்றான நத்தார் பண்டிகையின் ஆரம்பமாக ஔிவிழா நிகழ்வு அனைத்து இடங்களிலும் ஆண்டுதோடும் மார்கழி மாதம் இறுதிப்பகுதியில் நடைபெறுவது வழக்கமாகும்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக மாவட்ட செயலர் எஸ்.குணபாலன், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாட்ட செயலாளர், பாடசாலை மாணவர்கள், மாவட்ட செயலகத்தின் ஏனைய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.