யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதன் போது ஏ9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
இச் சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த கிளிநொச்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்குவரத்து காவற்துறையினரும் பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கிய முள்ளிவாய்க்கால்கஞ்சியினை பெற்று குடித்தனர்.
வீதி போக்கு வரத்து காவற்துறையினர் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிக்கும்புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிந்தன. பின்னர் அவை சிங்கள ஊடகங்களிலும் வெளிவந்தன.
இதனை தொடர்ந்தே குறித்த இரண்டு காவற்துறையினர் மீதும் விசாரணையை மேற்கொள்ளுமாறு கொழும்பிலிருந்து தகவல் வழங்கப்பட்டு அவர்களுக்கு உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
t7psc6
Hi this is testing mail
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.