முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ள குறித்த படகில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.
அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த படகில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கியுள்ளனர்.
மேலும், படகில் காணப்பட்டவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையிலும், சிலர் சுகயனமுற்ற நிலையிலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.