கிளிநொச்சியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் நடராசா கிருஷ்ணகுமார் (வயது - 52) சுகவீனம் காரணமாக நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் நடராசா கிருஷ்ணகுமார் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரையும் புலிகளின் குரல் வானொலி, தமிழீழ வானொலி ஆகியவற்றின் அலுவலகச் செய்தியாளராகவும், நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு குரல் வழங்குபவராகவும் செயற்பட்டார்.
2010ஆம் ஆண்டு முதல் உதயன் உள்ளிட்ட பல ஊடகங்களில் கிளிநொச்சி பிராந்திய செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். நீண்டகாலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அக்கராயன்குளம் அணைக்கட்டு வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.