மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை வீரரும், 1970களில் அணியின் முக்கிய உறுப்பினருமான பெர்னார்ட் ஜூலியன் தனது 75ஆவது வயதில் டிரினிடாட் வால்சேனில் காலமானார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் திறமையான துடுப்பாட்டக்காரராக விளங்கிய ஜூலியன், 1975ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலகக் கிண்ண தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த முக்கிய வீரராவார்.
அந்த தொடரில் இலங்கைக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 4 விக்கெட்டுக்கு 27 ஓட்டங்கள் என்ற சிறப்பான பந்துவீச்சு சாதனையையும் படைத்தார்.
மேலும், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் 26 ஓட்டங்கள் எடுத்து, அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.