யானையின் முடியில் மோதிரம் அணிந்தால் என்ன சிறப்புகள் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
யானை முடியை வைத்து பலரும் கையில் பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் போன்றவற்றை அணிந்திருப்பார்கள். இந்த யானை முடியை தங்கம் ,வெள்ளி. ஐம்பொன் போன்ற அணிகலன்களில் மோதிரமாக கையில் அணிந்து கொள்வது சிறப்பாகும். சாஸ்திர ரீதியாக தங்கத்தில் அணிவது மிகச் சிறப்பாக கூறப்படுகிறது.
ஏனெனில் நவக்கிரகங்களின் குரு பகவானின் வாகனமாக திகழ்வதுதான் யானை. மேலும் தங்கம் குருவிற்கு உகந்த பொருளாகும் .அதனால்தான் தங்கத்தில் அணிவது சிறப்பாக கூறப்படுகிறது.
யானை முடி மோதிரத்தின் சிறப்புகள்:
மறைமுகமாக நம்மை நோக்கி வரும் சூழ்ச்சியை உடைக்கும் தன்மை கொண்டது .மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற பாதிப்புகளை தடுக்கக் கூடியது. நடக்கக்கூடிய கெட்டவைகளை முன்கூட்டியே நமக்கு தெரிய படுத்தும். இதை அணியும்போது ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கும்.
மேலும் யானையின் பலமும் கிடைக்கும் .அது மட்டுமல்லாமல் பயந்த சுபாபம் உள்ளவர்கள் அணிவது சிறப்பாக கூறப்படுகிறது, அவர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்து எதிர்மறை எண்ணங்களை உடலில் அண்ட விடாது.
யானை முடி மோதிரத்தை அணியும் முறை:
முதன் முதலில் அணியும்போது வியாழக்கிழமை குரு ஓரையில் வளர்பிறை திதியில் அணிவது சிறப்பாகும். ஆண் பெண் என இரு பாலருமே அணியலாம் .ஆண் என்றால் வலது கையிலும் பெண் என்றால் இடது கையிலும் அணிவது நல்ல பலனை கொடுக்கும்.
மாதத்திற்கு ஒரு முறை சாம்பிராணியில் காண்பித்து பிறகு பயன்படுத்தலாம் இவ்வாறு செய்யும்போது அதில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகும்.
யாரெல்லாம் அணியலாம்?
அனைவருமே அணிவது சிறந்த பலனை கொடுக்கும் .குறிப்பாக வியாழக்கிழமை பிறந்தவர்கள் மற்றும் ஆங்கிலத் தேதியில் 3, 21, 11 ,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அணிவது மிகச் சிறப்பாகவும் கூறப்படுகிறது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.