யார் தயார்...
யார் தயார்...

ஜனாதிபதித் தேர்தல்களம் நாளுக்கு தாள் குடுபிடித்துக்கொண்டு வருகின்றது. ஒரு காலத்தில் இலங்கையின் உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்து தென்னிலங்கையின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் முயல்வார்கள். போர் முடிவுக்கு வந்த பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஒரு வேட்பாளர் பேச முயல் மற்றையவர் அதை இனவாதமாக்கி தெற்கில் தனக்கு வாக்கை அறுவடை செய்துகொள்வார். 2019ஆம் ஆண்டு நாட்டின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி பேசப்பட்டாலும், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பேசியிருந்தார்.

ஆனால் இம்முறை தேர்தல்களத்தில் மும்முனைப் போட்டி, சில வேளைகளில் அது அதிகரிக்கக்கூடிய நிலையும் உள்ள சூழலில் எந்தவொரு பிரதான ஜனாதிபதி வேட்பாளரும் இனப்பிரச்சினை தொடர்பில் வாயே திறக்காத நிலைமையே நீடிக்கின்றது. நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்துகின்றோம் என்பதே அவர்கள் ஒவ்வொருவரதும் வாதமாக இருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதையொட்டியே கருத்துப் பரிமாற்றங்களை முன்வைத்து வருகின்றார்.

இந்த நாடு வங்குரோத்து அடைவதற்கு பல காரணிகள் சொல்லப்பட்டாலும் எல்லாவற்றினதும் முடிச்சு அவிழும் இடமாக இருப்பது இனப்பிரச்சினையே. இனப்பிரச்சினையை போராக சிங்களதேசம் பிரகடனப்படுத்தியதால் அதனாலும் அதன் பக்க விளைவுகளாலேயுமே நாடு வங்குரோத்து அடைத்தது.

பொருளாதார மீட்சி தொடர்பில் பேசும் ஜனாதிபதி வேட்பாளர்கள் அதற்கான மூலகாரணியான இனப்பிரச்சினை தீர்க்கப்படாமை பற்றித் தெரித்திருந்தும் அது தொடர்பாக வாயே திறக்கப் பஞ்சிப்படுகின்றனர். அல்லது அந்த விடயத்தைப் பற்றிப் பேசினால் தமக்கான தென்னிலங்கை வாக்கு வங்கி சரிந்துவிடும் என்று அச்சப்படுகின்றனர்.

இனப்பிரச்சினைக்கு நீடித்த நிலையான தீர்வு எட்டப்படாமல் இலங்கையால் முதலீடுகளை ஈர்க்க முடியாது. இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அண்மையில் இதுதொடர்பில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார். யார் வெற்றி பெற்றாலும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுதான் முக்கியம் என்பதைச் சொல்லியிருக்கின்றார். பொருளாதார மீட்சி என்பது உடனடித் தேவையாக இருந்தாலும், நீண்டகால நோக்கில் நிலைத்திருக்கக்கூடிய பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டேயாக வேண்டும்.

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதன் ஊடாகவே புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்கமுடியும். முதலீடுகள் நாட்டுக்கு வருவதன் ஊடாகவே. பொருளாதார திமிர்வை ஏற்படுத்தமுடியும் அதுவும் 2028ஆம் ஆண்டு முதல் கடன்களை மீளச்செலுத்த வேண்டியிருக்கையில் கிய காலத்தில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் புலம்பெயர் முதலீடுகளை அதிகளவில் ஈர்ந்தேயாக வேண்டிய தேவை இருக்கின்றது.

எல்லாவற்றுக்கும் அடிப்படைக்காரணியாக இருக்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் நிலைப்பாடுகளைப் பகிரங்கப்படுத்த வேண்டும். சிங்கள் மக்களிடமும். இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதன் ஊடாகவே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்ற உண்மையை அவர்களுக்குச் சொல்லவேண்டும். எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளராவது இதைச்செய்யத் தயாரா?

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

452 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.