யாழ்ப்பாணத்தில் ஜெரால்ட் ரிபெல்லி
யாழ்ப்பாணத்தில் ஜெரால்ட் ரிபெல்லி

(ஆதவன்)

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ஜெரால்ட் ரிபெல்லி, மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக, யாழ். மாவட்டத்துக்கு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வந்துள்ளார்.

அவர் யாழ். மாவட்டப் பதில் செயலர் ம.பிரதீபனை, யாழ்.மாவட்டச் செயலர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். 

இந்தக் கலந்துரையாடலில் 'Food for Assets' செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் மற்றும் மேற்படி செயற்றிட் டம் குறித்து எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

சந்திப்பில் உலக உணவுத் திட்ட அரசாங் கப் பங்குடமை அதிகாரி முஸ்தபா நிஹ்மத், உலக உணவுத்திட்டப் பொறியியலாளர் டபிள்யூ. எ.சந்திரதிலக, யாழ்.மாவட்டச் செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் வ.தர்சினி ஆகியோரும் கலந்துகொண்டனர். (ஏ) 

92 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.