யாழ் மாவட்டத்திலிருந்து எவரும் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு தெரிவுசெய்யப்படவில்லை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
யாழ் மாவட்டத்திலிருந்து எவரும் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு தெரிவுசெய்யப்படவில்லை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

புதியவன்.

யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கல்வி பயில்வதற்கு யாழ் மாவட்ட மாணவர்கள் எவரும் விரும்பாத காரணத்தால் இம்முறை யாழ்மாவட்டத்தில் இருந்து எவரும் தெரிவுசெய்யப்படவில்லையென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது . 

2022 ஆண்டு உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக தெரிவு விபரம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் யாழ் மாவட்டத்தில் பொறியியல் கற்பதற்கு தகுதியுள்ள அனைவரும் தென்பகுதி பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்ததன் காரணமாக எவரும் யாழ் பல்கழைக்கழகத்தினை விருப்ப தோ்வாக கொள்ளாத காரணத்தால் எவரும் இம்முறை அனுமதிக்கப்படவில்லை.

மிகுந்த சிரமத்தின் மத்தியில் 1990களில் அனுமதி பெறப்பட்டு 2010களில் ஆரம்பிக்கப்பட்ட பொறியியல் பீடம் எம் மாணவர்கள் பயன் பெறவேண்டுமென்ற நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்து குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் அப்பீடத்தில் கல்வி கற்க எம் மாணவர்கள் விரும்பாதது வேதனையான விடயமாகும் மட்டுமல்ல எமது பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை எமது மண்ணிலேயே கல்விகற்பிக்க விரும்பாதது ஆச்சரியமான விடயமாகும். (ச)

177 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.