ரஜினிகாந்த் படத் தலைப்பைப் பயன்படுத்தி ஏற்கெனவே பல படங்கள் வெளிவந்துள்ளன. இப்போது அவரது படங்களில் ஒன்றான ‘மிஸ்டர் பாரத்’ தலைப்பைப் பயன்படுத்தி ஒரு படம் உருவாகியுள்ளது.
இதை பேஷன் ஸ்டூடியோஸ், ஜி ஸ்குவாட், தி ரூட் நிறுவனங்கள் சார்பாக சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி தயாரிக்கின்றனர். ‘பைனலி’ யூடியூப் மூலம் பிரபலமான பாரத் கதாநாயகனாக நடிக்கிறார்.
படத்தை இயக்கும் நிரஞ்சன் கூறும்போது, “இது எளிமையான கதைக்களம். கதாபாத்திரத்தை மையப்படுத்திக் கதை நகரும். பிடிவாத குணம் கொண்ட ஒருவன், காதல் திருமணத்தை விரும்புகிறான். ஆனால், ஒரு பெண்ணே முன் வந்து அவனிடம் காதலைச் சொல்லும்போது அவனால் அதை உணரக் கூட முடியவில்லை. ஏன் என்பதுதான் திரைக்கதை. ஜாலியான பொழுதுபோக்கு படம். படத்தின் தலைப்பை ஏவி.எம் நிறுவனத்தில் அனுமதி வாங்கி பயன்படுத்தியுள்ளோம்” என்றார்.
இதில் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் என பலர் நடிக்கின்றனர். பிரணவ் முனிராஜ் இசை அமைக்கிறார். ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.