Blood Moon 2025 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் மாதத்தில் 14 ஆம் திகதி நிகழ உள்ளது. இந்த கிரகணம் எந்தெந்த பகுதிகளில் தெரியும், யாருக்கெல்லாம் பாதிப்பை ஏற்படும் என தெரிந்து கொள்வோம்.
சந்திர கிரகணம் எத்தனை மணிக்கு நிகழ்கிறது?
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் மார்ச் மாதத்தில் நிகழ உள்ளது. இந்திய நேரப்படி 2025 மார்ச் 14 ஆம் திகதி காலை 9.27 மணிக்கு தொடங்கி மாலை 3.03 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் 12.28 மணிக்கு உச்சமடைகிறது.
இந்தியாவை பொறுத்த வரையில் கிரகணம் நடக்கும் நேரம் முழுவதும் பகல் நேரம் என்பதால், நம் நாட்டில் கிரகணத்தைப் பார்க்க இயலாது.
எந்த நட்சத்திரத்தில் நடக்கிறது?
சந்திர கிரகணம், மார்ச் 14 ஆம் திகதி உத்திரம் நட்சத்திரத்தில் நிகழ உள்ளது.
சந்திர கிரகணம் என்றால் என்ன?
சந்திர கிரகணம் பௌர்ணமி நாளில் வருவது வழக்கம். சூரியன் - சந்திரன் இதையே ஒரே நேர்கோட்டில் பூமி வருவதால், பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் போது சந்திர கிரகணம் நிகழ்வு ஏற்படுகிறது.
ரத்த சிவப்பு சந்திர கிரகணம் என்றால் என்ன?
சந்திர கிரகணம் பல நிறங்களில் தெரிவது உண்டு. சில நேரங்களில் சிவப்பாக, சில நேரங்களில் நீல நிறத்தில் தெரியும். அந்த வகையில் மார்ச் 14 ஆம் திகதி ஏற்படக்கூடிய சந்திர கிரகணம் சிவப்பு நிறத்தில் தோன்றுவதால் ரத்த சிவப்பு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.
ஏனெனில், சூரிய ஒளியை பிரதிபலிக்கக் கூடிய சந்திரனை பூமி மறைக்கக் கூடிய இந்த நிகழ்வின் போது, பூமியின் வளிமண்டலத்தில் சூரிய ஒளி வடிகட்டப்படுவதால் சந்திரன் மீது சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது. அதாவது இந்த நிகழ்வானது சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது நிகழும் நிகழ்வுகளைப் போன்றது.
எந்தெந்த நாடுகளில் சந்திர கிரகணம் பார்க்க இயலும்?
நாசாவின் வலைத்தளத்தின்படி, இந்த சந்திர கிரகணம் நிகழ்வானது வட அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்பிரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கா உள்ளிட்ட பகுதிகளில் தெரியும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.