ஐ.பி.எல். தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9இலக்குகளால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது ஆர்.சி.பி.
ஜெய்ப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. சஞ்சுசாம்சன் 19 பந்துகளில் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். ரியான் பராக் 30 ஓட்டங்களுடனும், ஜெய்ஸ்வால் 74 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பெங்களூரு அணி சார்பாக புவனேஷ்வர் குமார். யஷ்தயாள். ஹேசில்வுட் மற்றும் கருணல் பாண்டியா ஆகியோர் தலா ஒரு இலக்கை கைப்பற்றினர்.
174 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர். சி.பி. அணிக்கு பிலிப் சால்ட் மற்றும் விராட் ஹோக்லி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். சால்ட், 33 பந்துகளில் 65 ஓட்டங்கள் எடுத்தார். ஹோக்லி 45 பந் துகளில் 62 ஓட்டங்கள் எடுத்தார். தேவ்தத் படிக்கல், 28 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்தார். 17.3 பந்துப்பரி மாற்றங்கள் நிறைவில் ஒரு இலக்கு இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்து ஆர்.சி.பி வெற்றி பெற்றது.
நடப்புத் தொடரில் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆர்.சி.பி., 4 வெற்றி மற்றும் 2 தோல்வி அடைந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.