ரி-20 கிரிக்கெட் வரலாற்றில் அணி ஒன்றின் வெற்றியை மூன்று சூப்பர் ஓவர்கள் மூலம் தீர்மானிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் நேற்று பதிவாகியுள்ளது.
கிளாஸ்கோவில் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மூன்றாவது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ஓட்டங்களை குவித்திருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன்படி, கிரிக்கெட் விதிகளின்படி சூப்பர் ஓவர் மூலம் போட்டியின் வெற்றியாளர்களை தீர்மானிக்க நடுவர்கள் முடிவு செய்தனர்.
அந்தநிலையில், சூப்பர் ஒவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ஓட்டங்களை எடுத்தது, அதே நேரத்தில் நெதர்லாந்து அணியும் சூப்பர் ஓவரில் 19 ஓட்டங்களை எடுத்தது. பின்னர், முதல் சூப்பர் ஓவரில் இரு அணிகளும் சம ஓட்டங்களை பெற்றதால் வெற்றியாளர்களை தீர்மானிக்க இரண்டாவது சூப்பர் ஓவர் விளையாட வேண்டியிருந்தது. இரண்டாவது சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ஓட்டங்களை எடுத்தது, இரண்டாவது சூப்பர் ஓவரில் 18 என்ற இலக்கை துரத்திய நேபாளம் அணி, இரண்டாவது சூப்பர் ஓவரில் 17 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
அதன்படி, இந்தப் போட்டியின் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது சூப்பர் ஓவரை விளையாட நடுவர்கள் முடிவு செய்ய வேண்டியிருந்தது. மூன்றாவது சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஓட்டங்கள் எதனையும் எடுக்க முடியாமல் தடுமாறியிருந்தனர்.
பின்னர் நெதர்லாந்து அணியினர் ஆறு பந்துகளில் ஒரு ஓட்டம் என்ற எளிதான இலக்கை துரத்தினர், மைக்கேல் லெவிட் மூன்றாவது சூப்பர் ஓவரின் முதல் பந்தில் ஒரு ஆறு ஓட்டம் ஒன்றை அடித்து நெதர்லாந்துக்கு இந்த போட்டியில் வெற்றியை தனதாக்கியது.
qs90zl
qs90zl
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.