துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் விரைவில் ரூ.100 கோடி வசூலிக்கவுள்ளது. கடந்த 11 நாள்களில் ரூ. 96.8 கோடி வசூலித்துள்ளது.
நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளதரி, ராம்கி, சாய் குமார், ரித்விக் ஆகியோர் நடித்த லக்கி பாக்ஸர் திரைப்படம் தீபாவளி பண்டிகைகையொட்டி அக்டோபர் 31ஆம் திகதி வெளியானது.
முழு தெலுங்கு படமான லக்கி பாஸ்கர் தமிழ், மலையாளம், ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. துல்கர் சல்மான் தமிழ், மலையாளம் மொழிகளில் டப்பிங் செய்துள்ளார். இப்படத்தை இயக்கியுள்ளார்.
மும்பை பின்னணியில் உள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் முழுக்க முழுக்க அரங்குகள் அமைத்து எடுக்கப்பட்டுள்ளது. வீடு முதல் வங்கி வரை அனைத்துமே செயற்கை அரங்குகள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.
கிங் ஆஃப் கோத்தா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், துல்கர் சல்மானின் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலான வசூலை லக்கி பாஸ்கர் படம் ஈட்டியுள்ளது.
கடந்த 11 நாள்களில் மட்டும் ரூ.96.8 கோடியை லக்கி பாஸ்கர் திரைப்படம் வசூலித்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.