ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில், லக்னோவை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி, தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சென்னை சுப்பர்கிங்ஸ்.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. லக்னோ அணியின் ஆரம்ப வீரர்களாக மார்க்கம் மற்றும் மிச்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினார்கள். 6 ஓட்டங்களுடன் வீழ்த்தப்பட்டார் மார்க்கம். இந்தத் தொடர் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிக்கொலஸ் பூரன் நேற்று 8 ஓட்டங்களுடன் கட்டுப்படுத்தப்பட்டார். மிச்செல் மார்ஷ் 30 ஓட்டங்களைப் பெற்றாலும் அதற்காக 25 பந்துகளை எதிர்கொண்டார்.
அணித்தலைவர் பன்ட் மிகவும் நிதானமான அரைச்சதம் ஒன்றை 42 பந்துகளில் பதிவுசெய்தார். அவர் 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க முடிவில் லக்னோ அணி 7 இலக்குகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் ஜடேஜா இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினார். பதிலுக்குக்களமிறங்கிய சென்னை அணிக்கு நீண்ட நாள்களின் பின்னர் ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. ஷைக்ரஷீட், ரச்சின் ரவீந்திரா இருவரும் இணைந்து அதிரடி காட்ட 4.2 பந்துப்பரிமாற்றங்களில் 50 ஓட்டங்களைத் தொட்டது சென்னை. 27 ஓட்டங்களுடன் ஷைக் ரஷீட் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபதி, ரவீந்திர ஜடேஜா இருவரும் மத்திய வரிசையில் தடுமாற்றம் காட்டினார்கள். நல்லபடியாகச் சென்றுகொண்டிருந்த சென்னையின் இன்னிங்ஸில் அவர்கள் இருவரும் அழுத்தத்தை ஏற்படுத்தினார்கள். துபே ஒரு முனையில் நிலைத்து நிற்க மறுமுனையில் வந்த வேகத்தில் அதிரடிகாட்டினார் டோனி, முடிவில் 3 பந்துகள் மீதமிருக்க 5 இலக்குகளால் வென்றது சென்னை.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.