பசுபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள் வனுவாடுவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ள நிலையில் தேடல் குழுக்கள் உயிர் பிழைத்தவர்களைக் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுவதுடன், காயங்களுக்குள்ளான 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒரே இரவில் வனுவாடுவில் ஏற்பட்ட 7.3 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து வீழ்ந்தன.
நிலநடுக்கம் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து தூதரகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களும் சேதத்தை ஏற்படுத்தியதுடன், நாட்டின் மின்சாரம் மற்றும் வலையமைப்புச் சேவைகளும் முடக்கியுள்ளது.
தேடுதல் மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, ஏழு நாள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வனுவாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதிவான உயிரிழப்புகளில் நான்கு பேர் தலைநகர் போர்ட் விலாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆறு பேர் நிலச்சரிவில் இருந்தும், நான்கு பேர் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்தும் உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.