சிறுபோகம் இம்முறை இல்லை
(ஆதவன்)
கிளிநொச்சி, வன்னேரிக்குளத்தின் கீழ் இவ் வாண்டு சிறுபோகம் இடம்பெறாது என கிளிநொச்சி மேற்குக்கான நீர்ப்பாசனப் பொறியியலாளர் ரி.ரிசியந்தன் தெரிவித்தார்.
கிளிநொச்சி, வன்னேரிக்குளத்தின் சீரமைப்பு வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதனாலேயே வன்னேரிக்குளத்தின் கீழ் சிறுபோகச் செய்கைகள் மேற்கொள்ளப்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றாக வன்னேரிக்குளம் விளங்குகின்றது. இந்தக் குளத்தின் கீழ் காலபோகத்தில் 363 ஏக்கரிலும் சிறுபோகத்தில் குறைந்தது 121 ஏக்கரிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.