வரலாற்றில் இன்று – 01.01.2025
வரலாற்றில் இன்று – 01.01.2025

ஜனவரி 1 (January 1) கிரிகோரியன் ஆண்டின் முதல் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 (நெட்டாண்டுகளில் 365) நாட்கள் உள்ளன.

வரலாறு

ஐரோப்பாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்த நடுக்காலப் பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ஆண்டின் ஆரம்ப நாளாக திசம்பர் 25 (இயேசுவின் பிறப்பு), மார்ச் 1, மார்ச் 25 (இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு), அல்லது உயிர்ப்பு ஞாயிறு போன்ற முக்கிய கிறித்தவத் திருவிழா நாட்களைத் தேர்ந்தெடுத்தன. மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் செப்டம்பர் முதல் நாளை ஆண்டின் தொடக்க நாளாகத் தேர்ந்தெடுத்தன.

இங்கிலாந்தில், சனவரி 1 புத்தாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது, ஆனால் 12ஆம் நூற்றாண்டு முதல் 1752 வரை இங்கிலாந்தில் மார்ச் 25இல் ஆண்டுத் தொடக்கமாக இருந்தது. பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகள் கிரெகொரியின் நாட்காட்டியைப் பின்பற்றுவதற்கு முன்னரேயே சனவரி 1 ஐ ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடின. எடுத்துக்காட்டாக, இசுக்கொட்லாந்து 1600 இல் சனவரி 1 ஐ புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தது. இங்கிலாந்து, அயர்லாந்து, மற்றும் பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் நாட்காட்டிச் சட்டம், 1750 இன் படி, 1752இல் புத்தாண்டை சனவரி 1 இற்கு மாற்றின. அதே ஆண்டின் செப்டம்பரில், பிரித்தானியா, மற்றும் அதன் குடியேற்ற நாடுகளில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகமானது.

சனவரி 1 அதிகாரபூர்வமான ஆண்டுத் தொடக்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட காலக்கோடு பின்வருமாறு:

1362 – லிதுவேனியா
1522 – வெனிசுக் குடியரசு
1544 – புனித உரோமைப் பேரரசு (செருமனி)
1556 – எசுப்பானியா, போர்த்துகல்
1559 – புரூசியா, சுவீடன்
1564 – பிரான்சு
1576 – தெற்கு நெதர்லாந்து
1579 – லொரெயின்
1583 – வடக்கு நெதர்லாந்து
1600 – இசுக்கொட்லாந்து
1700 – உருசியா
1752 – பெரிய பிரித்தானியா, அதன் குடியேற்ற நாடுகள்

நிகழ்வுகள்

கிமு 45 – உரோமைப் பேரரசில் யூலியன் நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. சனவரி 1 புத்தாண்டின் புதிய நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது.
கிமு 42 – உரோமை மேலவை யூலியசு சீசரை கடவுளுக்கான மரியாதையை அளித்தது.
1001 – முதலாம் இசுடீவன் அங்கேரியின் முதலாவது மன்னராக அறிவிக்கப்பட்டார்.
1068 – நான்காம் ரொமானசு பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.
1502 – போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் இரியோ டி செனீரோ நகரை அடைந்தார்.
1515 – பன்னிரண்டாம் லூயி இறந்ததை அடுத்து, அவரது மருமகன் 20-அகவையில் முதலாம் பிரான்சிசு பிரான்சின் மன்னராக முடி சூடினான்.
1600 – இசுக்கொட்லாந்து மார்ச் 25 இற்குப் பதிலாக சனவரி 1 ஐ ஆண்டின் தொடக்க நாளாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.
1651 – இரண்டாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1700 – உருசியா அனோ டொமினி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தது.
1707 – போர்த்துகல்லின் மன்னராக ஐந்தாம் ஜான் முடிசூடினார்.
1752 – கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.
1772 – 90 ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தக்கூடியதான உலகின் முதலாவது பயணிகள் காசோலை லண்டனில் விற்பனைக்கு வந்தது.
1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அரச கடற்படை மற்றும் அமெரிக்க விடுதலைப் படையினரின் நடவடிக்கையினால் வர்ஜீனியாவின் நோர்போக் நகரம் தீப்பற்றி அழிந்தது.
1788 – தி டைம்ஸ் முதல் இதழ் இலண்டனில் வெளியிடப்பட்டது.
1800 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.
1801 – சிறுகோள் பட்டையில் காணப்படக்கூடிய மிகப்பெரும் பொருள் சியரீசு கியூசெப்பே பியாசி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1801 – பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது.
1804 – எயிட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவுக்கு வந்தது. இதுவே முதலாவது கறுப்பினக் குடியரசும், வட அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது விடுதலை பெற்ற நாடும் ஆகும்.
1808 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.
1833 – ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகளின் மீது உரிமை கொண்டாடியது.
1858 – இலங்கையில் முதலாவது தந்திச் சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பமானது.[1]
1866 – யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை அமைக்கப்பட்டது.[1]
1867 – ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் “சின்சினாட்டி” நகருக்கும் கென்டக்கியின் “கொவிங்டன்” நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.
1872 – இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.[1]
1872 – முதலாவது இந்திய அஞ்சல் ஆல்ப்சின் சேனீ மலைச் சுரங்கம் ஊடாக சென்றது.[1]
1877 – இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா தில்லியில் அறிவிக்கப்பட்டார்.[1]
1883 – இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
1886 – பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.
1890 – எரித்திரியா இத்தாலிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.
1893 – யப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
1899 – கியூபாவில் எசுப்பானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
1901 – நைஜீரியா பிரித்தானியாவின் முதலாவது காப்பரசானது.
1901 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாசுமேனியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆத்திரேலியப் பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார்.
1906 – பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1911 – வட மண்டலம் தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலிய நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.
1912 – சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.
1919 – ஸ்கொட்லாந்தில் அயோலயர் என்ற கப்பல் மூழ்கியதில் 205 பேர் உயிரிழந்தனர்..
1927 – மெக்சிக்கோவில் கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.
1927 – துருக்கி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. இதன்படி 1926, டிசம்பர் 18 இற்கு அடுத்த நாள் சனவரி 1, 1927 ஆக மாற்றப்பட்டது.
1928 – யோசப் ஸ்டாலினின் தனிச்செயலரான போரிஸ் பசனோவ் சோவியத் ஓன்றியத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எல்லை கடந்து ஈரான் சென்றார்.
1935 – இத்தாலியக் குடியேற்ற நாடுகளான திரிப்பொலி, சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து லிபியா ஆகியன.
1945 – இரண்டாம் உலகப் போர்: மால்மெடி படுகொலைகளுக்கு எதிர்த்தாக்குதலாக அமெரிக்கா பெல்ஜியத்தில் 60 நாட்சி ஜெர்மனி போர்க் கைதிகளைக் கொன்றது.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனி]]யின் வான்படை வடக்கு ஐரோப்பாவில் நேச நாடுகளின் வான் படைகளை அழிக்கும் நோக்குடன் போடன்பிளாட் நடவடிக்கையை மேற்கொண்டது.
1947 – பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றப்பட்ட செருமனியின் பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு எனப் பெயர் பெற்றது.
1948 – பிரித்தானிய தொடருந்து சேவைகள் தேசியமயமாக்கப்பட்டன.
1948 – பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 மில்லியன் ரூபாய் பணத்தை இந்தியா தரமுடியாதென அறிவித்தது.
1949 – ஐநா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.
1956 – எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றிடம் இருந்து சூடான் விடுதலை பெற்றது.
1958 – இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ஸ்ரீ (ශ්‍රී) எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.
1958 – ஐரோப்பிய சமுகம் அமைக்கப்பட்டது.
1959 – கியூபப் புரட்சி: கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா பிடெல் காஸ்ட்ரோவின் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1960 – பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிடம் கமரூன் இருந்து விடுதலை பெற்றது.
1962 – சமோவா நியூசிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1964 – ரொடீசியா, னியாசாலாந்து கூட்டமைப்பு கலைக்கப்பட்டு சாம்பியா, மலாவி ஆகிய இரு சுதந்திர நாடுகளாகவும், ரொடீசியா என்ற பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட நாடாகவும் மூன்றாகப் பிரிக்கப்பட்டது.
1971 – அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் புகைத்தல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன.
1973 – டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகியன ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் இணைந்தன.
1978 – ஏர் இந்தியா போயிங் 747 விமானம் வெடித்து பம்பாயில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 213 பேர் உயிரிழந்தனர்.
1979 – சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தூதரக உறவு நடைமுறைக்கு வந்தது.
1981 – கிரேக்கம் ஐரோப்பிய சமூகத்துடன் இணைந்தது.
1981 – பலாவுக் குடியரசு ஐக்கிய அமெரிக்காவின் அதிகாரத்துள் சுயாட்சி பெற்றது.
1983 – அர்ப்பாநெட் தனது மூல பிணைய நெறிமுறைகளை இணைய நெறிமுறையாக மாற்றியது இன்றைய இணையத்தின் தொடக்கத்திற்குக் காரணமானது.
1984 – புரூணை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1985 – பிரித்தானியாவில் முதன் முதலில் செல்பேசித் தொடர்பை வோடபோன் நிறுவனம் ஏற்படுத்தியது.
1989 – ஓசோன் குறைபாட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களைத் தடை செய்யும் மொன்ட்ரியால் உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
1993 – செக்கோசிலவாக்கியா நாடு செக் குடியரசு, சிலோவாக் குடியரசு என இரு நாடுகளாகப் பிளவடைந்தது.
1995 – ஆஸ்திரியா, பின்லாந்து, சுவீடன் ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
1995 – உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது.
1999 – 11 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் யூரோ நாணயம் அறிமுகமானது.
2007 – பல்காரியா, உருமேனியா ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
2007 – இந்தோனேசியாவின் மாக்காசார் நீரிணைப் பகுதியில் ஆடம் ஏர் 574 விமானம் 102 பேருடன் மூழ்கியது.
2008 – கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
2009 – தாய்லாந்து, பேங்காக் நகரில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 66 பேர் உயிரிழந்தனர்.
2010 – பாக்கித்தானில் கைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் 105 பேர் கொல்லப்பட்டனர்.
2011 – எகிப்து, அலெக்சாந்திரியாவில் கோப்து கிறித்தவர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
2011 – எசுத்தோனியா யூரோ நாணயத்தை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.
2013 – கோட் டிவார், அபிஜான் நகரில் விளையாட்டரங்கொன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.
2015 – உருசியா, பெலருஸ், ஆர்மீனியா, கசக்கஸ்தான், கிர்கிசுத்தான் ஆகிய நாடுகள் இணைந்து யூரேசியப் பொருளாதார ஒன்றியம் என்ற அமைப்பை நிறுவின..
2017 – துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரவு இடுதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1484 – உல்ரிச் ஸ்விங்ளி, சுவிட்சர்லாந்து இறையியலாளர் (இ. 1531)
1548 – கியோர்டானோ புரூணோ, இத்தாலியக் கணிதவியலாளர், கவிஞர் (இ. 1600)
1697 – யோசப் பிரான்சுவா தூப்ளே, இந்தியாவின் பிரெஞ்சு குடியேற்றங்களின் தலைமை ஆளுநர் (இ. 1763)
1852 – உசான்-அனத்தோல் தெமார்சே, பிரான்சிய வேதியியலாளர் (இ. 1904)
1863 – பியர் தெ குபர்த்தென், பிரான்சிய வரலாற்றாளர், பன்னாட்டு ஒலிம்பிக் குழுவை அமைத்தவர் (இ. 1937)
1867 – மேரி அக்வர்த் எவர்ழ்செடுபாங்கிலேய வானியலாளர் (இ. 1949)
1879 – இ. எம். பிராஸ்டர், ஆங்கிலேய எக்ழுத்தாளர் (இ. 1970)
1890 – ரி. பி. ஜாயா, இலங்கை கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1960)
1891 – சம்பூர்ணாநந்தர், இராசத்தானின் 3வது ஆளுநர் (இ. 1969)
1892 – மகாதேவ தேசாய், இந்திய செயற்பாட்டாளர் (இ. 1942)
1894 – சத்தியேந்திர நாத் போசு, இந்திய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1974)
1914 – நூர் இனாயத் கான், பிரித்தானிய உளவாளி (இ. 1944)
1919 – ஜே. டி. சாலிஞ்சர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2010)
1925 – வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (இ. 2015)
1925 – மௌலானா வஹிதூதீன் கான், இந்திய செயற்பாட்டாளர்
1932 – அலவி மௌலானா, இலங்கை முசுலிம் அரசியல்வாதி (இ. 2016)
1935 – ஷகிலா, இந்தித் திரைப்பட நடிகை (இ. 2017)
1935 – ஓம்பிரகாஷ் சௌதாலா, இந்திய அரசியல்வாதி
1940 – பண்ணாமத்துக் கவிராயர், இலங்கை எழுத்தாளர்
1942 – அலசான் வட்டாரா, ஐவரி கோஸ்டின் அரசுத்தலைவர்
1943 – செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர்
1944 – உமர் அல்-பஷீர், சூடானின் 7வது அரசுத்தலைவர்
1944 – கல்வயல் வே. குமாரசாமி, ஈழத்துக் கவிஞர், கல்வியாளர் (இ. 2016)
1951 – நானா படேகர், இந்திய நடிகர்
1951 – மார்த்தா பி. கேனசு, அமெரிக்க வானியலாளர்
1952 – சேக் அமத் பின் கலீபா அல் தானி, கத்தார் ஆட்சியாளர்
1952 – ஷாஜி என். கருண், இந்திய இயக்குநர், ஒளிப்பதிவாளர்
1956 – கிறிஸ்டைன் லகார்டே, பிரான்சிய அரசியல்வாதி
1957 – நஜீப் அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி
1966 – மில்லர், முதல் கரும்புலி (இ. 1987)
1971 – கலாபவன் மணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பாடகர் (இ. 2016)
1971 – ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா, இந்திய அரசியல்வாதி
1975 – சோனாலி பேந்திரே, இந்திய நடிகை
1979 – வித்யா பாலன், இந்திய நடிகை
1979 – சுஜாதா கிருஷ்ணன், மலேசியத் தமிழ்த் திரைப்பட நடிகை (இ. 2007)

இறப்புகள்

1894 – ஐன்ரிக் ஏர்ட்சு, செருமானிய இயற்பியலாளர் (பி. 1857)
1901 – சி. வை. தாமோதரம்பிள்ளை, ஈழத்து வரலாற்றாளர், பதிப்பாளர் (பி. 1832)
1910 – வே. அகிலேசபிள்ளை, தமிழறிஞர், ஈழத்துப் புலவர் (பி. 1853)
1944 – எட்வின் லூட்டியன்சு, ஆங்கிலேய கட்டிடக் கலைஞர், தியெப்வால் நினைவுச்சின்னத்தை வடிவமைத்தவர் (பி. 1869)
1945 – வேதநாயகம் சாமுவேல் அசரியா, ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதல் இந்திய ஆயர் (பி. 1874)
1955 – சாந்தி சுவரூப் பட்நாகர், இந்திய வேதியியலாளர் (பி. 1894)
1992 – கிரேசு ஹாப்பர், கோபோல் நிரலாக்க மொழியை உருவாக்கிய அமெரிக்கர் (பி. 1906)
2008 – தியாகராஜா மகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1960)
2010 – பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1957)
2016 – வில்மோஸ் சிக்மண்ட், அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் (பி. 1930)

சிறப்பு நாள்

இயேசுவின் விருத்தசேதன விழா
புத்தாண்டு நாள் (கிரெகொரியின் நாட்காட்டி)
சப்பானியப் புத்தாண்டு
உலக அமைதி நாள் (கத்தோலிக்க திருச்சபை)
உலகக் குடும்ப நாள்
குவான்சா கடைசி நாள் (ஐக்கிய அமெரிக்கா)
விடுதலை நாள்:
எயிட்டி (1804)
சூடான் (1956)
கமரூன் (1960)
புரூணை (1984)
செக் குடியரசு (1993)
சிலோவாக்கியா (1993)

148 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.