வரலாற்றில் இன்று – 21.01.2025
வரலாற்றில் இன்று – 21.01.2025

ஜனவரி 21 கிரிகோரியன் ஆண்டின் 21 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 344 (நெட்டாண்டுகளில் 345) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

    763 – கூஃபா என்ற இடத்தில் அலீதுகளுக்கும் அபாசியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் அபாசியர்கள் வென்றனர்.
    1643 – ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.
    1720 – சுவீடனும் புருசியாவும் ஸ்டாக்ஹோம் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தி போரை நிறுத்திக் கொண்டன.
    1749 – இத்தாலி, வெரோனா நகரில் பிலர்மோனிக்கோ அரங்கு தீக்கிரையானது. இது மீண்டும் 1754 இல் மீலக் கட்டப்பட்டது.
    1774 – முதலாம் அப்துல் அமீது உதுமானியப் பேரரசராகவும் இசுலாமின் கலிபாவாகவும் நியமிக்கப்பட்டார்.
    1793 – பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக கில்லட்டின் மூலம் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
    1801 – ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் முதல் தடவையாகக் கூடியது.[1]
    1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மேலவையில் இருந்து பதவி விலகினார்.
    1919 – புரட்சிகர ஐரிசு நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு அயர்லாந்துக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
    1924 – சோவியத் தலைவர் விளாதிமிர் லெனின் இறந்தார்.
    1925 – அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.
    1941 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலிய, பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.
    1947 – முதலாவது சிங்களத் திரைப்படம் கடவுனு பொறந்துவ இலங்கையில் திரையிடப்பட்டது.
    1948 – கியூபெக்கின் தேசியக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டு முதற்தடவையாக அதன் தேசியப் பேரவையில் பறக்க விடப்பட்டது.
    1954 – உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், நோட்டிலசு, அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
    1960 – ஜமேக்காவில் அவியாங்கா விமானம் வீழ்ந்து தீப்பிடித்ததில் 37 பேர் உயிரிழந்தனர்.
    1960 – மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் செம்முகக் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
    1960 – தென்னாப்பிரிக்காவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 435 தொழிலாளர்கள் உயிருடன் புதையுண்டனர்.
    1968 – பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் குண்டுவீச்சு விமானம் ஒன்று அமெரிக்காவின் தூலே வான் தளத்தில் மோதியதில், அப்பகுதி முழுவதும் அணுக் கதிர்வீச்சினால் பாதிப்படைந்தது.
    1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
    1976 – கான்கோர்டு விமானம் தனது முதலாவது வணிக சேவையை இலண்டன்-பகுரைன், பாரிசு-ரியோ வழியாக ஆரம்பித்தது.
    1995 – கொழும்பில் யோசப் வாசு அடிகளுக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அருளாளர் பட்டம் வழங்கினார்.[2]
    2003 – 7.6 அளவு நிலநடுக்கம் மெக்சிக்கோவின் கொலிமா மாநிலத்தைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.
    2004 – நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இசுபிரிட் தளவுலவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.
    2008 – அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசிப் பழங்குடி இறந்தார்.
    2009 – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது.
    2009 – காசாக்கரையில் இருந்து இசுரேல் அதிகாரபூர்வமாக வெளியேறியது.
    2011 – அல்பேனியா, டிரானாவில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்தனர்.
    2017 – ஆந்திரப் பிரதேசம், விஜயநகரம், கூனேருவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 42 பேர் உயிரிழந்தனர், 68 பேர் காயமடைந்தனர்.
    2017 – அமெரிக்க அரசுத் தலைவராக டோனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் அமெரிக்காவின் 400 இற்கும் அதிகமான நகரங்களிலும், 160 இற்கும் மேற்பட்ட நாடுகளிலும் 2 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர்.[3]

பிறப்புகள்

    1863 – பிரம்மானந்தர், தமிழக ஆன்மிகவாதி (இ. 1922)
    1869 – கிரிகோரி ரஸ்புடின், உருசிய மதகுரு, மந்திரவாதி (இ. 1916)
    1908 – பெங்கித் சுட்டிராங்மன், தென்மார்க்கு வானியலாளர் (இ. 1987)
    1919 – அரிசரண் சிங் பிரார், இந்திய-பஞ்சாப் அரசியல்வாதி (இ. 2009)
    1923 – உலோலா புலோறேஸ், எசுப்பானியப் பாடகி (இ. 1995)
    1924 – மது தண்டவதே, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2005)
    1928 – யீன் சார்ப், அமெரிக்க அரசியல் அறிவியலாளர்
    1941 – எலைன் ஷோவால்டர், அமெரிக்க எழுத்தாளர்
    1949 – துருஒங் டான் சாங், வியட்நாமின் 7-வது அரசுத்தலைவர்
    1953 – பவுல் ஆல்லென், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்
    1957 – கி. சிவநேசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2008)
    1958 – உ. வாசுகி, தமிழக-இந்திய இடதுசாரி அரசியல்வாதி
    1968 – சஞ்சய் சுப்ரமண்யன், தமிழகக் கருநாடக இசைப் பாடகர்
    1968 – சுந்தர் சி., தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர்
    1980 – சந்தானம், தமிழக நகைச்சுவை நடிகர்
    1984 – லுகே கிரிமேஸ், அமெரிக்க நடிகர்
    1987 – ஆயிதா ஹாஜி அலீ, சுவீடன் அரசியல்வாதி

இறப்புகள்

    1793 – பிரான்சின் பதினாறாம் லூயி (பி. 1754)
    1892 – ஜான் கவுச் ஆடம்சு, பிரித்தானியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1819)
    1924 – விளாதிமிர் லெனின், உருசிய மார்க்சியப் புரட்சியாளர், சோவியத் ஒன்றியத்தின் 1வது தலைவர் (பி. 1870)
    1926 – கேமிலோ கொல்கி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய மருத்துவர் (பி. 1843)
    1945 – ராஷ் பிஹாரி போஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொறியியலாளர் (பி. 1886)
    1950 – ஜார்ஜ் ஆர்வெல், பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1903)
    1981 – விஷ்ணுராம் மேதி, அசாம் முதலமைச்சர் (பி. 1888)
    1989 – பில்லி டிப்டன், அமெரிக்க இசைக் கலைஞர் (பி. 1914)
    1989 – சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்
    1992 – எடி மாபோ, ஆத்திரேலியப் பழங்குடித் தலைவர் (பி. 1936)
    2002 – சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர் (பி. 1907)
    2013 – எம். எஸ். உதயமூர்த்தி, தமிழக எழுத்தாளர், தொழிலதிபர்
    2016 – மிருணாளினி சாராபாய், இந்திய நடனக் கலைஞர் (பி. 1918)
    2019 – சிவக்குமார சுவாமி, இந்திய, கருநாடக வீரசைவ ஆன்மிகத் தலைவர் (பி. 1907)

சிறப்பு நாள்

    தேசிய முத்த நாள் (ஐக்கிய அமெரிக்கா)

169 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.