இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முன்னதாக இத்தொடரின் 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 219 ஓட்டங்கள் இலக்கை இலங்கை அணி வெற்றிகரமாக கைப்பற்றியது.
இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை சேசிங் செய்த முதல் ஆசிய அணி என்ற மாபெரும் வரலாற்று சாதனையை இலங்கை படைத்துள்ளது.
இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஹெடிங்லேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 180 ஓட்டங்களை சேசிங் செய்தமையே சாதனையாகக் கருதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.