(ஆதவன்)
யாழ்மேலை வண்ணை நகர் அருள்மிகு ஸ்ரீ விசுவேச விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம், நாளை புதன்கிழமை காலை 11மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவின் இரதோற்சவம் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்று காலை 10 மணிக்கு எம்பெருமான் தேரில் ஆரோகணிப்பார். மறுநாள் தீர்த்தோற்சவம் காலை 10 மணிக்கும் இடம்பெறுமென ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்துள்ளனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.