வவுனியாவில் பல்வேறு இடங்களில் வனவள திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோத முறையில் கடத்த முற்பட்ட முதிரை மரக்குற்றிகளை மீட்கப்பட்டுள்ளதாக வனவளத்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருகையில்;
வனவளத்திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து மாவட்ட வனவள திணைக்கள அதிகாரி அஜித் ஜயசிங்கவின் நெறிப்படுத்தலின் கீழ் வட்ட வனவள அதிகாரி உடார சஞ்சீவவின் தலைமையிலான வனவள உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஓமந்தை மற்றும் கூமாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருநதனர்.
இந்த நாடவடிக்கையின் போது 27 முதிரை குற்றிகள் மீட்கப்பட்டதுடன் இரு கப் ரக வாகனமும் மீட்கப்பட்டிருந்தது.
வவுனியாவில் உள்ள மரக்காளையில் இருந்து அனுமதி பெறப்படாத 13 இலட்சம் பெறுமதியான தேக்கு மர பலகைகள் மீட்கப்பட்டதுடன், பறயநாலங்குளம் பகுதியில் காடழிப்பில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது டன், காடழிப்புக்கு பயன்படுத்திய டோசர் வாகனமும் கைப்பற்றப்பட்டது.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
xfdwa7
xfdwa7
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.